Gold Rate Today : தாறுமாறாக அதிகரித்த தங்க விலை.. இப்போதைக்கு வாங்க முடியாது போலயே.!!

First Published Apr 21, 2023, 9:39 AM IST

நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை காணலாம்.

அட்ச திருதியை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்கம் வாங்க ஆர்வம் கொண்டுள்ளனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இருப்பினும், தங்கத்தை வாங்க இல்லத்தரசிகள் பெருமளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த 2023ம் ஆண்டில் சவரனுக்கு 45 ஆயிரத்தை தாண்டி உச்சத்தை தொட்டது தங்கம்.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120  குறைந்து ரூ.45,200ஆக விற்பனையானது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5.650ஆக விற்பனையானது. அதேபோல 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,060ஆக விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய (ஏப்ரல் 21) நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 உயர்ந்து ரூ. 5,565க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 120 உயர்ந்து 45,320க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை 30 காசுகள் உயர்ந்து 81.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 81,300 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

click me!