Kitchen Tips: சிலிண்டர் 2 மாசம் வரணுமா?! கேஸ் செலவை பாதியாக குறைக்கும் சூப்பர் டிப்ஸ்!

Published : Apr 21, 2026, 04:14 PM IST

எவ்வளவு சிக்கனமா பயன்படுத்தினாலும் கேஸ் சீக்கிரம் தீர்ந்துடுதுன்னு பலரும் சொல்றாங்க. அப்போ கேஸ் சேமிக்க என்னதான் வழி? இதோ சிம்பிள் டிப்ஸ்.! இந்த டிப்ஸ் சமையல் எரிவாயுவை 2 மாதத்திற்கு கொண்டுவரும்.

PREV
17
Kitchen Tips: இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணா கேஸ் ரெண்டு மாசம் காலியாகாது!
என்ன செஞ்சாலும் கேஸ் தீர்ந்துடுதா?!

எல்லா வீட்டுத் தலைவிகளும் கேஸ் சேமிக்க பல வழிகளை முயற்சி செய்வது வழக்கம். பருப்பு, காய்கறிகளை முன்னதாக ஊறவைத்து வேகவைத்தல், ஒரே நேரத்தில் பல உணவுகளை சமைத்தல் போன்ற டிப்ஸ்கள் உதவிகரமாக இருக்கும். ஆனால் சிறிய கவனக்குறைவுகளால் கேஸ் விரைவாக முடிந்து விடுகிறது. சில எளிய பழக்கங்களை கடைப்பிடித்தால், கேஸ் சிலிண்டர் நீண்ட நாட்கள் பயன்படும்.

27
கேஸ் சேமிக்க புதுசு புதுசா வழி தேடுறாங்க.!
சமையல் கேஸ் சேமிச்சா, பணம் மிச்சமாகும், மாச பட்ஜெட்டும் குறையும். ஆனா, இப்போலாம் கேஸ் சிலிண்டர் விலை நிலையா இல்ல. தினமும் ஏறிட்டே இருக்கு. இது சாமானிய மக்களுக்கு பெரிய தலைவலியா இருக்கு. அதனால, கேஸ் சேமிக்க புதுசு புதுசா வழி தேடுறாங்க.
37
கேஸ் சேமிக்கிறது எப்படி? அது அவ்ளோ சுலபமா?
கேஸ் சிலிண்டர் விலை குறையாதுன்னா, நாமதான் கேஸ் பயன்பாட்டைக் குறைச்சு சேமிக்க முயற்சி பண்ணனும். சரி, கேஸ் சேமிக்கிறது எப்படி? அது அவ்ளோ சுலபமா? அதுக்கு என்னென்ன டிப்ஸ் இருக்குன்னு பார்க்கலாம்.
47
பாத்திரங்களில் ஈரம் இருக்க வேண்டாம்!

நிறைய பேர் பாத்திரங்களைக் கழுவுன உடனே நேரடியா கேஸ் அடுப்புல வெச்சுடுவாங்க. ஆனா, இப்படி செஞ்சா கேஸ் சீக்கிரம் தீர்ந்துடும். ஏன்னா, ஈரமான பாத்திரம் சூடாக அதிக நேரம் எடுக்கும். அதனால, ஈரமான பாத்திரத்தை அடுப்புல வைக்கிறதுக்கு முன்னாடி, ஒரு சுத்தமான துணியால நல்லா தொடச்சிடுங்க. இதனால பாத்திரம் சீக்கிரம் சூடாகும், கேஸ் வீணாவதும் குறையும்.

57
குக்கரை அதிகம் பயன்படுத்துங்க!

சமைக்கும்போது எப்பவும் திறந்த பாத்திரத்துல சமைக்கிறதை விட, குக்கர் பயன்படுத்துறது நல்லது. குக்கர்ல சமைச்சா சாதம், காய்கறிகள் சீக்கிரம் வெந்துடும். தேவையில்லாம கேஸ் வீணாகாது. சமையல் வேலையும் சீக்கிரமா முடியும்.

67
பர்னர் சுத்தமா இருக்கணும்!

கேஸ் சேமிக்க, முதல்ல கேஸ் பர்னரை சுத்தமா வெச்சுக்கணும். குறைஞ்சது மூணு மாசத்துக்கு ஒரு முறையாவது பர்னரை சர்வீஸ் செய்யணும். அடுப்புல வர்ற நெருப்போட நிறத்தை வெச்சு பர்னர் சுத்தமா இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம். நெருப்பு சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்துல வந்தா, பர்னர்ல பிரச்னை இருக்குன்னு அர்த்தம். உடனே பர்னரை சுத்தம் செய்யுங்க. இதனால தேவையில்லாத கேஸ் இழப்பைத் தடுக்கலாம்.

77
தானியங்கள், அரிசியை ஊறவைங்க.!

தானியங்கள் வேகுறதுக்கு அதிக நேரம் ஆகும். இதனால கேஸ் அதிகமா செலவாகும். இதைத் தவிர்க்க, சமைக்கிறதுக்கு குறைஞ்சது ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே தானியங்கள் அல்லது அரிசியை தண்ணியில ஊறவைங்க. இதனால, சாதம் அல்லது தானியங்கள் சீக்கிரமா வெந்துடும். கேஸும் மிச்சமாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories