NHAI ஆகஸ்ட் 15, 2025 முதல் புதிய FASTag ஆண்டு பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.3,000 கட்டணத்தில், 12 மாதங்கள் அல்லது 200 டோல் பயணங்கள் வரை இலவசமாகச் செல்லலாம்.
இந்த சுதந்திர தினம், ஆகஸ்ட் 15, 2025 முதல் NHAI புதிய FASTag ஆண்டு பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை ரூ.3,000 கட்டினால், 12 மாதங்கள் அல்லது அதிகபட்சம் 200 டோல் பயணங்கள் வரை உங்களுக்கு இலவசமாகச் செல்லும் சலுகை கிடைக்கும். அடிக்கடி ஹைவே (தேசிய நெடுஞ்சாலை) பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு இது பெரிய சேமிப்பாக இருக்கும்.
25
யாருக்கு இந்த பாஸ்?
இந்த ஆண்டு பாஸ் தனிப்பட்ட (நான்-கமெர்ஷியல்) வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும். கார்கள், ஜீப்புகள், வேன்கள் போன்றவை. லாரி, பேருந்து அல்லது வணிக வாகனங்களுக்கு இந்த சலுகை கிடையாது. மேலும், இது தேசிய நெடுஞ்சாலைகள் (NH) மற்றும் தேசிய எக்ஸ்பிரஸ்வே (NE) டோல் பிளாசாக்களிலேயே பொருந்தும். பிற மாநில சாலைகள் அல்லது மாவட்ட சாலைகளில் வழக்கம்போல FASTag கட்டணம் வசூலிக்கப்படும்.
35
சேமிப்பு எவ்வளவு?
பொதுவாக ஒரு டோல் கட்டணம் ரூ.50 - ரூ.120 இருக்கும். ஆண்டு பாஸ் எடுத்தால், ஒரு பயணத்துக்கு சுமார் ரூ.15 மட்டுமே ஆகும். வருடத்திற்கு ரூ.17,000 - ரூ.20,000 வரை சேமிக்கலாம். டோல் பிளாசாவில் நீண்ட வரிசையில் நின்று நேரம் வீணாகும் சிக்கலும் குறையும்.
நீங்கள் NHAI இணையதளம் அல்லது Rajmarg Yatra செயலி மூலம் இந்த பாஸ் பெறலாம். உங்கள் FASTag இயங்கும் நிலையில் இருக்க வேண்டும், வாகன RC-க்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும், பிளாக் லிஸ்டில் இருக்கக்கூடாது. ரூ.3,000 பணத்தை UPI, நெட் பேங்கிங் அல்லது கார்டு மூலம் செலுத்தலாம். புதிய FASTag வாங்க தேவையில்லை.
55
NHAI FASTag ஆண்டு திட்டம்
கட்டணம் செலுத்திய 2 மணி நேரத்திற்குள் பாஸ் செயல்படும், SMS மூலம் உறுதிப்படுத்தல் வரும். 200 பயணங்கள் முடிந்தாலும், 1 வருடம் முடிந்தாலும் பாஸ் தானாகவே முடியும். அதன்பின் வழக்கம்போல ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம். அடிக்கடி பயணம் செய்பவர்கள் உடனே இதை பெற்றுக்கொள்வது நல்லது ஆகும்.