EPFO rules
பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். பணியாளர் டெபாசிட் செய்த அதே தொகையை அவர் பணிபுரியும் நிறுவனமும் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த பணம் பணியாளரின் ஓய்வுக்குப் பிறகு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், நீங்கள் விரும்பினால், ஓய்வுபெற்ற பிறகு அல்லது அதற்கு முன் டெபாசிட் செய்த தொகையை எடுத்துக்கொள்ளலாம்.
வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் தொடர்பாக சில விதிகள் உள்ளன. இது பற்றி பலருக்கும் தெரியாது. உதாரணமாக, நீங்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும் என்று EPFO விதி உள்ளது.
EPFO and CBDT
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்படி, நீங்கள் சில நிபந்தனைகளைப் பின்பற்றினால், 50 ஆயிரம் ரூபாய் போனஸ் நேரடியாக உங்கள் கணக்கில் வழங்கப்படும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) EPF சந்தாதாரர்களுக்கு வெகுமதி அளிக்க லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட் (Loyalty cum Life Benefit) முறையைப் பரிந்துரைத்தது. இந்த விதியின் கீழ், பணியாளர்கள் ரூ. 50,000 வரை நேரடி பலனைப் பெற முடியும்.
EPFO Bonus
இந்த போனஸின் பலன் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்கள் கணக்குகளில் பங்களிப்பவர்களுக்குக் கிடைக்கும். அதாவது, 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஒரே பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யும் சந்தாதாரர்கள், இந்த போனஸ் தொகையைப் பெறுகிறார்கள். அதாவது வழக்கமான டெபாசிட் மூலம் கிடைக்கும் பலனுடன் ரூ.50,000 கூடுதல் பலன் கிடைக்கும்.
EPF Account
EPFO சந்தாதாரர்கள் தங்கள் EPF கணக்கில் தொடர்ந்து டெபாசிட் செய்ய வேண்டும். வேலை மாறினாலும் ஒரே பி.எஃப். கணக்கில் தொடர்ந்து பங்களிப்பைத் தொடர வேண்டும். ஒரே கணக்கில் 20 ஆண்டுகள் தொடர்ந்து பங்களித்த ஊழியர்கள், போனஸ் பலன்களைப் பெற தகுதி அடைவார்கள். ஏற்கனவே இருக்கும் EPF கணக்கில் தொடர்ந்து பங்களிப்பைச் செலுத்த முந்தைய மற்றும் தற்போதைய நிறுவனங்களில் தெரிவிப்பது முக்கியம்.
EPFO Bonus amount
லாயல்டி-கம்-லைஃப் பலன்களின் கீழ், ரூ.5000 வரை அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 போனஸ் பெறலாம். அடிப்படை சம்பளம் ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்களுக்கு ரூ.40,000 போனஸ் கிடைக்கும். அடிப்படை சம்பளம் 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர்களுக்கு 50,000 ரூபாய் போனஸ் தொகை வழங்கப்படும்.
EPFO interest rate
நாடு முழுவதும் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கிய பங்கு வகிக்கிறது. பணிக்காலத்துக்குப் பிறகு பணிளாயர்களின் குடும்பத்துக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. தற்போது, EPFO 2023-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. நீங்கள் EPFO நிபந்தனையைப் பூர்த்தி செய்து, பி.எஃப். கணக்கில் ரூ.50,000 போனஸ் தொகையும் ஈட்டலாம்.