PM Ujjwala Yojana Subsidy: அல்டிமேட் சந்தோஷ செய்தி.! கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Published : Oct 01, 2026, 03:05 PM IST

கேஸ் சிலிண்டர் வாங்கும் குடும்பங்களுக்கு ரூ.300 மானியம் கிடைக்குமா? பிரதமரின் உஜ்வலா திட்டத்தில் யாரெல்லாம் தகுதி பெறுகிறார்கள், மானியம் எப்படி கிடைக்கும், விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான தகவல்கள் இதோ!

PREV
16
மத்திய அரசு ஒப்புதல்

பிரதமரின் உஜ்வாலா திட்டத்துல இணைஞ்சிருக்கவங்களுக்கு ஒரு நல்ல செய்தி. கேஸ் சிலிண்டருக்கு குடுக்குற 300 ரூபாய் மானியத்தை 2026-27 வருஷம் வரைக்கும் தொடர மத்திய அரசு ஒப்புதல் கொடுத்திருக்கு. இதனால தகுதியான பயனாளிகளுக்கு தொடர்ந்து மானியம் கிடைக்கும்.

26
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தன்னோட 'எக்ஸ்' தளத்துல இந்த தகவலை சொல்லியிருக்காரு. 14.2 கிலோ வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் வழங்குறதை 2026-27 நிதியாண்டு வரைக்கும் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கு.

36
இந்த சலுகை யாருக்கு?

பெரிய சிலிண்டர் மட்டுமில்லாம, 5 கிலோ கேஸ் சிலிண்டருக்கும் அதுக்கு ஏத்த மாதிரி மானியம் கிடைக்கும். உஜ்வாலா திட்ட பயனாளிகள் தொடர்ந்து இந்த சலுகையை அனுபவிக்கலாம்.

46
நிம்மதி அடைந்த இல்லத்தரசிகள்.!

இந்த மானிய திட்டத்துக்காக மத்திய அரசு 12,001 கோடி ரூபாய் செலவு செய்யப்போகுது. மக்களுக்கு ரொம்ப கம்மியான விலையில கேஸ் சிலிண்டர் கிடைக்கணும்ங்குறதுதான் அரசோட நோக்கம். இந்த 300 ரூபாய் மானியம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு பெரிய நிம்மதியை கொடுக்கும்.

56
எந்தவித டெபாசிட் தொகையும் தேவையில்லை

பிரதமரின் உஜ்வாலா திட்டம் 2016 மே மாசம் ஆரம்பிச்சாங்க. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு எந்தவித டெபாசிட் தொகையும் இல்லாம இலவசமா கேஸ் கனெக்‌ஷன் கொடுக்குறதுதான் இந்த திட்டத்தோட ஸ்பெஷல்.

66
உதவி செய்யும் மத்திய அரசு

இந்த திட்டத்துல இதுவரைக்கும் நாடு முழுக்க சுமார் 10.57 கோடி பேருக்கு உஜ்வாலா கேஸ் கனெக்‌ஷன் கொடுத்திருக்காங்க. அதுமட்டுமில்லாம, இந்த திட்டத்துல சேருறவங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories