இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கியமான அம்சம், இரவு நேர டேட்டா பயன்பாடு பிரதான ரீசார்ஜ் திட்டத்தின் பகல் நேர டேட்டா இருப்பிலிருந்து தனியாகக் கணக்கிடப்படும் என்பதாகும்.
அதாவது, பகலில் உங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான டேட்டாவைச் செலவழிக்காமல், இரவு நேரத்தில் கூடுதலாக இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும், பதிவிறக்கம் செய்யும் டேட்டாவுக்கு அளவு வரம்பு கிடையாது என்றும், டேட்டா வேகம் குறைக்கப்படாது என்றும் ஜியோ தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
4G, 5G இரண்டிலும் அன்லிமிடெட் டேட்டா!
இந்த ரூ.50 திட்டம் 4G மற்றும் 5G ஆகிய இரு நெட்வொர்க்குகளிலும் செயல்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 4G நெட்வொர்க் பகுதியில் இருப்பவர்களும், 5G சேவை கிடைக்கும் பகுதியில் இருப்பவர்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏற்கெனவே ஜியோவில் 5G தொடர்பான கூடுதல் டேட்டா சலுகைகளைக் கொண்ட ரூ.15 திட்டம் உள்ளது. இதற்கு ஒரு நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும், ரூ.25 திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த ரூ.25 திட்டம் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.