Real Estate: பட்ஜெட்டில் நிலம்! மண்ணெல்லாம் வளம்! தஞ்சையை விரும்பும் முதலீட்டார்கள்!

Published : Jul 08, 2025, 04:32 PM ISTUpdated : Jul 08, 2025, 09:24 PM IST

தஞ்சாவூரின் வளர்ச்சிப் பாதை நில முதலீட்டை லாபகரமானதாக்குகிறது. அமைதியான சூழல், வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் இங்கு மனை வாங்குவோரை ஈர்க்கின்றன. பல்வேறு பகுதிகளில் விலைகள் உயர்ந்து வருவதால், தஞ்சாவூர் நிலம் நம்பகமான முதலீடாகக் கருதப்படுகிறது.

PREV
15
அழைக்கிறது விவசாய பூமி

அமைதியும், ஆன்மீகமும், செழிப்பும் கலந்த நகரம் தஞ்சாவூர். காவிரி ஆறு பாயும் பூமியில், நிலம் என்பதே செல்வம் என்ற உணர்வுடன் மனை வாங்க நினைப்பவர்கள் இப்போது அதிகரித்து வருகின்றனர். காரணம், தஞ்சையின் வளர்ச்சிப் பாதை நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் கட்டியெழுப்பி வருகிறது. தஞ்சாவூரின் முக்கிய அடையாளம் அதன் மண் வளமும், விவசாய வளமும். நகரத்தின் அமைதியான சூழல், போக்குவரத்து நெரிசலின்மை, நல்ல குடிநீர் வசதி, கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சிகளால் மக்களை கவர்ந்து வருகிறது. இதனால்தான், கொரோனா காலம் முடிந்த பின்பு, இங்கு இடம் வாங்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

25
பட்ஜெட்டில் வாங்கலாம் வாங்க!

தஞ்சையில் வீட்டு மனைகளின் விலை கடந்த 10 ஆண்டுகளில் சில பகுதிகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அருளானந்த நகர், மெடிக்கல் காலேஜ் சாலை போன்ற பகுதிகளில் விலை பெரிதும் அதிகரித்திருக்கிறது. பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றி சதுர அடி 6,000 முதல் 10,000 வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த பகுதியில் நெருக்கமான இடமீது சண்டை என்பதால், கீழவாசல், சூரக்கோட்டை போன்ற இடங்களில் மக்கள் நகர்ந்து செல்கிறார்கள்.

35
மனதை மயக்கும் வயல்வெளிகள்!

அருளானந்த நகர் வி.ஐ.பி. பகுதி. 40, 60 அடி சாலைகள் கொண்ட இந்த பகுதியில், பல தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் வீடு கட்டியுள்ளனர். இதனால் இங்கு விலை தொடக்கம் முதலே உயர்ந்துள்ளது. அதேசமயம், மெடிக்கல் காலேஜ் சாலை பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இருப்பதனால், வசதிக்கேற்ப வீடுகள் தேவைப்பட்டு விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மற்றும் சமுத்திரம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் சுற்றுலா மையமாக மாறி வருவதால், இங்கு மனை விலை தொடர்ந்து உயரும் நிலை காணப்படுகிறது. அதேபோல, நாஞ்சிக்கோட்டை சாலை, சீனிவாசபுரம், ஐ.பி. காலனி போன்ற இடங்கள் தொழில் வளர்ச்சி, வணிக வளாகங்கள், புதிய அபார்ட்மென்ட் திட்டங்களால் நம்பகமான முதலீட்டு இடங்களாக இருக்கின்றன.

45
பண்ணை நிலத்தை விரும்புவோருக்கு அதிர்ஷ்டம்

தஞ்சை மாவட்டத்தில் பண்ணை வீடு என்ற ஆளுமைத் தீர்வு வளர்ந்து வருகிறது. குறிப்பாக செங்கிப்பட்டி பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் சுமார் 15 லட்சம் வரை விற்பனை ஆகிறது. விவசாய நிலங்கள் குறைவாக விற்கப்படுவதில்லை என்பது விவசாயத்தை ஆதரிக்கும் நகரத்தின் ஓர் தனிச்சிறப்பு.தஞ்சை பெரிய கோயில் அருகில் கட்டட உயர வரம்புகள் உள்ளதால், விலை அதிகமாக மாறவில்லை. ஆனால் அமைதி, ஆன்மீக சூழலில் வாழ விரும்புபவர்கள் அதனை முதலீடாக கருதலாம்.

55
எல்லா வசதியும் இருக்கு!

மொத்தத்தில், தஞ்சை நகரம் தற்போது ஒரு புதிய வளர்ச்சி அடையும் கட்டத்தில் இருக்கிறது. வீடு கட்ட நினைப்பவர்கள், வசதியான விலை, சாலை, பள்ளி, மருத்துவமனை வசதிகளை கருத்தில் கொண்டு மனைகளை தேர்வு செய்யலாம். இப்போது முதலீடு செய்தால், எதிர்காலத்தில் அதுவே பெரும் சொத்து ஆகும் என்பது நிச்சயம்!

Read more Photos on
click me!

Recommended Stories