இதை மட்டும் செஞ்சா போதும்! ஒரே வருஷத்துல நீங்க கோடீஸ்வரன்!

Published : Jul 08, 2025, 03:52 PM IST

மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து வளர்ச்சி அடைய துல்லியமான முடிவு, திட்டமிட்ட செயல்பாடு மற்றும் தொடர்ச்சியான முயற்சி தேவை. இலக்குகளை நிர்ணயித்தல், திறமைகளை மேம்படுத்துதல் மற்றும் நிதி ரிஸ்க் எடுத்தல் போன்றவை முக்கிய அடிப்படைகள்.

PREV
15
மிடில் கிளாஸ் to Rich

நமது நாட்டில் பெரும்பாலானவர்கள் மிடில் கிளாஸ் வாழ்வில் தான் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். சிறிய சம்பளம், அதிக செலவுகள், எதிர்பாராத அவசரச் செலவுகள் – இவை அனைத்தும் சேர்ந்து வாழ்க்கையை சவாலாக மாற்றி விடுகின்றன. ஆனால், துல்லியமான முடிவு, திட்டமிட்ட செயல்பாடு மற்றும் தொடர்ச்சியான முயற்சி இருந்தால் நிச்சயமாக வளர்ச்சி அடைய முடியும். அதற்கான முக்கிய மூன்று அடிப்படைகளை இங்கு பார்க்கலாம்.

25
இலக்கு (Goals): இது இருந்தால் எல்லாம் சாத்தியம்

பணம் சம்பாதித்தாலே போதும் என்று நினைத்தால் வளர்ச்சி எதுவும் கிடையாது. உங்களுடைய குறிக்கோள்களை தெளிவாகத் தீர்மானிக்க வேண்டும். எப்போது வீடு வாங்கவேண்டும்? எப்போது குழந்தைகளுக்கு கல்வி நிதி சேகரிக்கவேண்டும்? எப்போது ஓய்வூதிய திட்டம் தொடங்கவேண்டும்? இவைகளை கட்டிடத்தின் அடித்தளங்களை போல் திட்டமிட்டு செல்ல வேண்டும். 

35
திறமை (Skill): வெற்றிக்கான வழி

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், உங்கள் திறமையை தொடர்ந்து மேம்படுத்தி கொள்ள வேண்டும். வேலை இழப்புகள் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், உங்களிடம் தனித்துவமான திறமை இருந்தால், எந்த நிறுவனம் உங்களை இழக்க விரும்பாது. 

45
ரஸ்க் மாதிரி ரிஸ்க் எடுக்கனும்

இளம் பருவத்தில் கொஞ்சம் நிதி ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யும் மனதை வளர்த்துக்கொள்ளுங்கள். பங்குசந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், நல்ல ரிட்டர்ன் தரும் பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். வயது முதிர்ந்தபின்பு, குறைந்த ரிஸ்க் வாய்ந்த பத்திரங்கள் மற்றும் ஃபிக்ஸ்ட் டெபாசிட்கள் போன்றவற்றுக்கு மாறுங்கள்.

55
அப்டேட் அவசியம்

புதிய தொழில்நுட்பங்கள், நிர்வாக திறன், பிரச்சினை தீர்க்கும் திறன் போன்றவை உங்கள் முன்னேற்றத்திற்கு தேவை. அதேசமயம், கூடுதல் வருமானத்துக்கு பக்க வேலை வாய்ப்புகளையும் பாருங்கள். ஆன்லைன் வேலைகள், ஆலோசனை சேவைகள், சுயதொழில் முயற்சிகள் இவற்றைச் சேர்த்தால் நிதி நிலைப்பாட்டை எளிதாக அடைய முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories