வரிச் சலுகைகளைப் பெற, முக்கிய ஆவணங்களை வரிக் கணக்கில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான வரிச் சலுகைகளுக்குத் தேவையான ஆவணங்கள் குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது.
வருமான வரி சட்டம் பல்வேறு வகையான வரிச் சலுகைகளை வழங்குகிறது. ஆனால் அவற்றை தவறில்லாமல் பெற, சில முக்கிய ஆதாரங்களை சரியாகக் கொண்டு வரிக் கணக்கில் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் தற்போது மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் போலி ஆவணங்களின் மூலம் வரி விலக்கு கோரியவர்கள் அதிகமாக உள்ளதால், வருமான வரித்துறை புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
29
ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்
ஆயுள் காப்பீட்டு பிரீமியம் செலுத்துபவர்களுக்கு பிரிவு 80Cன் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகை உண்டு. ஆனால் இதற்கு இனி பாலிசி எண், இன்ஷூரன்ஸ் நிறுவனம், பிரீமியம் கட்டிய தேதி போன்ற விவரங்கள் வரிக் கணக்கில் அறிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ரைடர்கள் கூட சேர்க்கப்பட்டுள்ளன.
39
மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்
பிரிவு 80Dன் கீழ் குடும்பத்திற்கும், மூத்த குடிமக்களுக்கும் தனித்தனி வரிச் சலுகை கிடைக்கின்றன. இதற்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயர், பாலிசி எண், பிரீமியம் கட்டிய தேதிகளை அனுமதிக்கப்பட்ட ஆவணங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும்.
பிரிவு 10(13A)ன்கீழ் வீட்டு வாடகைக்கு விலக்கு பெறும் வசதி உள்ளது. வருட வாடகை தொகை ரூ.1 லட்சம் மீறும் போது வீட்டு உரிமையாளர் பான் எண்ணும் தேவையான ஆவணங்களும் தாக்கல் அவசியம்.
59
வீட்டுக் கடன்
பிரிவு 24(b)ன் கீழ் வீட்டு கடன் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரையிலும், அசல் தொகைக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் விலக்கு பெறலாம். ஆனால் கடன் வழங்கிய வங்கியின் பெயர், கடன் கணக்கு எண், ஒப்புதல் தேதி, 31-3-2025 நிலவரப்படி மீதமுள்ள கடன் தொகை உள்ளிட்ட விவரங்களை தர வேண்டும்.
69
கல்விக் கடன்
பிரிவு 80Eன் கீழ் கல்விக் கடன் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும். இதற்கும் கடன் அங்கீகரித்த நிதி நிறுவன விவரங்கள், கணக்கு எண் மற்றும் பாக்கிய நிலை அனைத்தும் அறிக்கை செய்ய வேண்டும்.
79
எலெக்ட்ரிக் வாகனக் கடன்
பிரிவு 80EEBன் கீழ் எலெக்ட்ரிக் வாகனக் கடனுக்கு வட்டி செலவினத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை உண்டு. அதற்கும் வங்கி விவரங்கள், கடன் கணக்கு எண், ஒப்புதல் தேதி, நிலுவை தொகை ஆகியன கட்டாயம்.
89
மூலதன ஆதாய கணக்கு முதலீடு
Capital Gains Account Schemeயில் முதலீடு செய்திருந்தால், அந்த வங்கி, ஐ.எஃப்.எஸ்.சி கோடு, கணக்கு தொடங்கிய தேதி போன்ற தகவல்களும் தர வேண்டும்.
.
99
கிரிப்டோ மற்றும் வி.டி.ஏ வருமானம்
கிரிப்டோ அல்லது பிற விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளின் வருமானத்தை தனி அட்டவணையில் குறிப்பிட வேண்டும். கையகப்படுத்திய தேதி, விற்பனை தேதி, விற்பனை வருமானம் போன்ற விவரங்கள் முக்கியம். பரிமாற்றத்திற்கு 1% TDS பிடிப்பு தவிர, 30% வரியும் கட்டாயம். இந்த ஆதாரங்களையெல்லாம் தரவு கணக்கில் சமர்ப்பித்தாலே உங்கள் வரிச் சலுகைகள் பாதுகாப்பாக, சிக்கல் இல்லாமல் கிடைக்கும். எனவே வருமான வரித் தாக்கலை பூரண தகவல்களுடன் செய்வது மிக அவசியம்