ATM Users Alert: ஏடிஎம் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு! இலவசப் பரிவர்த்தனை முடிந்தால் எவ்வளவு கட்டணம்?

Published : Nov 29, 2026, 09:02 PM IST

ATM Users Alert: ஏடிஎம்மில் அடிக்கடி பணம் எடுப்பவர்களா நீங்கள்? ஒரு மாதத்தில் எத்தனை முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம், அதற்கு மேல் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வேண்டிய தகவல்.

PREV
15
ஆர்பிஐ வெளியிட்ட புதிய ஏடிஎம் விதிகள்

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 27, 2026 அன்று ஒருங்கிணைத்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. 2008 முதல் 2022 வரையிலான 17 பழைய சுற்றறிக்கைகளில் இருந்த வழிமுறைகளை ஒரே தொகுப்பாக மாற்றியமைத்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் முக்கியமாக, ஒரு மாதத்தில் வாடிக்கையாளர் எத்தனை இலவசப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தியுள்ளார், அடுத்த பரிவர்த்தனைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படலாம் என்பதை வங்கிகள் எச்சரிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இலவசப் பரிவர்த்தனை எண்ணிக்கையோ, அதிகபட்ச கட்டணமோ உயர்த்தப்படவில்லை.

25
மாதம் எத்தனை முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம்?

வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இதில் பணம் எடுப்பது மட்டுமின்றி, இருப்புத் தொகை விசாரித்தல் உள்ளிட்ட பணமல்லாத பரிவர்த்தனைகளும் அடங்கும். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களில் மாதம் மூன்று இலவசப் பரிவர்த்தனைகள் கிடைக்கும். பெருநகரங்கள் அல்லாத இடங்களில் ஐந்து முறை இலவசமாகப் பயன்படுத்தலாம். இரு வகை இடங்களிலும் மற்ற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தினால் மொத்த இலவச வரம்பு ஐந்து பரிவர்த்தனைகள்தான். மற்ற வங்கி ஏடிஎம்களில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும்.

Home Loan Subsidy: சொந்த நிலம் இருக்கிறதா? வீடு கட்ட ரூ.2.50 லட்சம் வரை உதவி பெறுவது எப்படி?

35
கூடுதல் பரிவர்த்தனைக்கு எவ்வளவு கட்டணம்?

இலவச வரம்பு முடிந்த பிறகு வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.23 மற்றும் பொருந்தும் வரிகள் என ஆர்பிஐ வரம்பு நிர்ணயித்துள்ளது. 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியைக் கணக்கிட்டால், ரூ.23 கட்டணத்துக்கு மொத்தம் ரூ.27.14 செலுத்த வேண்டியிருக்கும். எனினும், வங்கிகள் இதைவிடக் குறைவான கட்டணத்தை நிர்ணயிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான கொள்கையை வங்கிகள் நிர்வாகக் குழு ஒப்புதலுடன் உருவாக்க வேண்டும். மேலும், ஏடிஎம்களில் இலவச வரம்பு, பணம் எடுக்கும் உச்சவரம்பு, கட்டண விவரங்கள் ஆகியவற்றை ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் காட்சிப்படுத்த வேண்டும்.

45
பணம் வராத பரிவர்த்தனைக்கும் கட்டணம் கிடையாது

ஏடிஎம்மில் தொழில்நுட்பக் கோளாறு, மென்பொருள் அல்லது தகவல் தொடர்புச் சிக்கல், பணம் இல்லாமை போன்ற காரணங்களால் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் அது இலவசப் பரிவர்த்தனை எண்ணிக்கையில் சேர்க்கப்படாது. வங்கி அல்லது சேவை வழங்குநருக்குச் சார்ந்த காரணங்களால் நிராகரிக்கப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கக் கூடாது என ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது. அதேபோல், கடைகளில் உள்ள பணம் எடுக்கும் கருவிகள் மூலம் டெபிட் அட்டை, முழுமையான வாடிக்கையாளர் விவரங்களுடன் வழங்கப்பட்ட முன்பணம் செலுத்தும் கருவிகள் மற்றும் யுபிஐ வழியாகப் பணம் பெறலாம். ஒரு முறைக்கு ரூ.2,000, ஒரு மாதத்திற்கு மொத்தம் ரூ.10,000 வரை எடுக்கலாம். இதற்கு வசூலிக்கப்படும் வாடிக்கையாளர் கட்டணம் ஒரு சதவீதத்தைத் தாண்டக்கூடாது.

55
கட்டணத்தைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஏடிஎம் கட்டணத்தைத் தவிர்க்க, முதலில் உங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்களைப் பயன்படுத்துவது நல்லது. சிறிய தொகைகளைப் பலமுறை எடுப்பதற்குப் பதிலாக, மாதத் தேவைக்கு ஏற்ப பணம் எடுப்பதன் மூலம் இலவச வரம்பைச் சேமிக்கலாம். பண இருப்பு விசாரித்தல், கணக்கு விவரங்களைப் பார்ப்பது போன்றவற்றுக்கு கைப்பேசி வங்கி சேவையைப் பயன்படுத்தலாம். வங்கியிலிருந்து வரும் குறுஞ்செய்தி எச்சரிக்கைகளையும் கவனிக்க வேண்டும். முக்கியமாக, இலவசப் பரிவர்த்தனை வரம்பு முடிந்துவிட்டதா என்பதைச் சரிபார்த்த பிறகே அடுத்த முறை ஏடிஎம்மைப் பயன்படுத்துங்கள். புதிய விதிகளின் நோக்கம் கட்டணத்தை உயர்த்துவது அல்ல; வாடிக்கையாளர்கள் எப்போது, எதற்காகக் கட்டணம் செலுத்துகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories