வங்கிக் கணக்குகள், லாக்கர் வசதியை பயன்படுத்த புதிய விதி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

First Published | Jan 18, 2025, 4:51 PM IST

RBI notification on nominees: ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகள் மற்றும் லாக்கர்களுக்கு நாமினிகள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்துபோனால், அவர்களின் கணக்கில் இருக்கும் பணத்தை குடும்பத்தினர் பெறுவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்கவும் லாக்கர் வசதியை பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்யவும் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

வங்கிகளின் அனைத்து விதமான கணக்குகளிலும், கணக்கின் முதன்மை உரிமையாளர் தனக்குப்பின் கணக்கில் உள்ள பணம் யாருக்குக் கிடைக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும். இதற்காக தனது கணக்கின் நாமினியை (வாரிசுதாரர்) நியமிக்க வேண்டும்.

Tap to resize

வங்கிக் கணக்குதாரர்கள் தங்கள் வாரிசுதாரர் பெயரைப் பதிவுசெய்யாமல் இருக்கும் காரணத்தால், பல கணக்குகளில் குடும்பத்தினர் பணத்தை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து விதமான வங்கிக் கணக்குகள் மற்றும் லாக்கர் வசதிக்கு வாரிசுதாரர் நியமினம் செய்வது கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

rbi

ஆர்பிஐ வெளியிட்டுள்ள இந்த புதிய விதிமுறை ஏற்கெனவே உள்ள கணக்குகளுக்கும், புதிதாகத் தொடங்கப்படும் கணக்குகளுக்கும் பொருந்தும். இந்த விதியைப் பின்பற்றி நாமினிகள் நியமிக்கப்படுவதை, வாடிக்கையாளர் சேவைக் குழு அல்லது இயக்குநர்கள் குழு தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதி முதல், ஒவ்வொரு காலாண்டிலும் DAKSH போர்டல் மூலம் இதுதொடர்பான அறிக்கையும் வழங்கப்படும்.

Who Gets The Money If A Small Savings Account Holder Dies Without Naming A Nominee

வாடிக்கையாளர்கள் ஒரு நாமினியை தேர்வு செய்யும்போது அல்லது நாமினி நியமனத்தை நிராகரிக்கும்போதும் கணக்கு தொடங்கும் படிவத்திலும் மாற்றங்கள் செய்யப்படும். இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

"ஏராளமான வங்கிக் கணக்குகளில் வாரிசுதாரர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இறந்துபோன கணக்குதாரர்களின் குடும்பத்தினர் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் கணக்கில் உள்ள பணத்தைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனைத் தவிர்க்க அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் லாக்கர் வசதிகளுக்கும் நாமினியை சேர்க்க வேண்டும். இது ஏற்கெனவே உள்ள கணக்குகளுக்கும் புதிதாக தொடங்கப்படும் கணக்குகளுக்கும் பொருந்தும்" என ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு தொடங்கும்போதே வாரிசுதாரர் பெயரையும் சேர்க்கும் வகையில் வங்கி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. தற்போது புதிய கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்களில் நாமினி பெயரைக் குறிப்பிடுவதற்கான இடம் இல்லை என்றால் அதை உடனடியாகச் சேர்த்து புதிய விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்தவும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

Latest Videos

click me!