2,000 ரூபாய் நோட்டுகள் குறித்து ஆர்பிஐ புதிய தகவல்; என்ன விஷயம் தெரியுமா? முழு விவரம்!

First Published | Jan 2, 2025, 1:55 PM IST

2,000 ரூபாய் நோட்டுகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய தகவல் வெளியிட்டுள்ளது. எது என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

RBI And Rs 2000 Notes

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

இந்தியாவில் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாட்டில் புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், 2018 19ம் ஆண்டுகளில் ரூ.2,000 நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது.

2000 currency note

ரூ.2,000 நோட்டுகள் நிறுத்தம் 

இதனைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி முதல் ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்பிறகு இந்த ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருந்து திரும்பப் பெற்றும் வரும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. அதாவது பொதுமக்கள் தங்கள் வைத்திருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது வங்கிகளில் மாற்றவோ ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

தமிழ்நாட்டில் பெரிய கார் உற்பத்தி ஆலை; முதற்கட்டமாக ரூ.914 கோடி முதலீடு செய்யும் டாடா; எத்தனை பேருக்கு வேலை?

Tap to resize

2,000 rupee notes can deposit at RBI offices

எவ்வளவு திரும்ப பெறப்பட்டுள்ளன?

அதன்படி மக்கள் தாங்கள் வைத்திருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மக்களிடம் இருந்து எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன? இன்னும் எவ்வளவு 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன? என்பது தொடர்பான தகவல்களை ரிசர்வ் வங்கி அவ்வப்போது தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், 2024ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வரை 98.12 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றுள்ளதாகவும், இன்னும் ரூ.6691 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது. மீதமிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளும் மக்களிடம் இருந்து முழுமையாக பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
 

RBI New Update for 2,000 rupee notes

எப்படி டெபாசிட் செய்வது?

இன்னும் ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அதனை அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர் புது தில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் டெபாசிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும் ரிசர்வ் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்காக இந்தியாவில் எந்த ஒரு தபால் நிலையத்திலிருந்தும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அஞ்சல் மூலம் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி FD Vs தபால் அலுவலக வைப்பு: எதில் அதிக வட்டி கிடைக்கும்? லேட்டஸ்ட் வட்டி விகிதம் எவ்வளவு?

Latest Videos

click me!