ATM-ல் பணம் இல்லையா? ஒரு நாளைக்கு பேங்க் உங்களுக்கு 100 ரூபாய் கொடுக்கும்!

Published : Feb 15, 2025, 01:08 PM IST

ATMல் பணம் வராமல் அக்கவுண்டில் இருந்து பணம் கட் ஆனால் என்ன செய்யலாம் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது பணம் இல்லாதது போன்ற காரணங்களால் இது நிகழலாம். சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளிப்பது மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிகள் பற்றியும் இக்கட்டுரை கூறுகிறது.

PREV
15
ATM-ல் பணம் இல்லையா? ஒரு நாளைக்கு பேங்க் உங்களுக்கு 100 ரூபாய் கொடுக்கும்!
ATM-ல் பணம் இல்லையா? ஒரு நாளைக்கு பேங்க் உங்களுக்கு 100 ரூபாய் கொடுக்கும்!

இப்போது எல்லாமே ஆன்லைன்ல நடக்குது என்றே கூறலாம். ஆனாலும் தேவைக்கு ATMல பணம் எடுப்போம். சில நேரங்களில் ATMல பணம் எடுக்கும்போது பணம் வராது, ஆனால் அக்கவுண்ட்ல இருந்து பணம் கட் ஆயிடும். இதனால நிறைய பேர் டென்ஷன் ஆகுறாங்க.

25
ஏடிஎம்

பொதுவா பேங்க்ல இருந்து பணம் கட் ஆகுறது, ATM பணம் கொடுக்காதது என பிரச்சனைகள் நடக்கும். சரியா சொல்லனும்னா டெக்னிக்கல் பிரச்சனை காரணமாகவும், ஏடிஎம்மில் பணம் இல்லாமல் இருப்பதாலும் இது நடக்கும். பேங்க்ல இருந்து பணம் கட் ஆனாலும், ATM பணம் கொடுக்கவில்லை என்றாலும் என்ன செய்யணும்னு இங்கு பார்க்கலாம்.

35
ஏடிஎம் பிரச்சனை

பொதுவா தப்பான டிரான்சாக்ஷன் ஆனா உடனே பணம் திருப்பி வந்துடும். ஆனா, பணம் வரலன்னா, பேங்க் கஸ்டமர் கேர்ல போன் பண்ணியோ அல்லது  அருகில் உள்ள பிராஞ்சுக்கு போய் புகார் கொடுக்கலாம். இதனால பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பிரச்சனை தீரலன்னா, RBI மாதிரி பெரிய பேங்க்ல புகார் கொடுக்கலாம். 

45
பேங்கில் புகார் அளிக்கலாம்

ஏடிஎம் மெஷினில் பணம் வராம அக்கவுண்ட்ல இருந்து பணம் கட் ஆனது பத்தி சம்பந்தப்பட்ட பேங்க்ல புகார் கொடுக்கலாம். புகார் கொடுத்தும் பேங்க் நடவடிக்கை எடுக்கலன்னா, ஒரு நாளைக்கு 100 ரூபாய் இழப்பீடு வாங்க RBI விதி இருக்கு. உங்க பேங்க் அல்லது வேற பேங்க் ஏடிஎம் பணம் வரலன்னாலும், ATM கார்டு கொடுத்த பேங்க்ல புகார் கொடுக்கலாம்.

55
ரிசர்வ் வங்கி விதி

புகார் கொடுத்த ஏழு வேலை நாள்ல பேங்க் பணத்தை திருப்பி கொடுக்கணும். பேங்க் அலட்சியம் பண்ணா, ஏழு நாள் கழிச்சு ஒரு நாளைக்கு 100 ரூபாய் இழப்பீடு கொடுக்கணும். 2011ல இருந்து RBI இந்த விதியை அமல்படுத்தியிருக்கு. ATMல பணம் வராத நாள்ல இருந்து 30 நாள்ல புகார் கொடுக்கணும். 30 நாள் கழிச்சு கொடுக்குற புகார் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.200 நோட்டுகள் உங்களிடம் இருக்கா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

Read more Photos on
click me!

Recommended Stories