இந்த இணைப்பு மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள RRB-களின் எண்ணிக்கை 43-ல் இருந்து 28 ஆக குறைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த இணைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே ஒரு RRB மட்டுமே செயல்படும்.
இந்த வங்கிகள் இணைப்பின் முக்கிய நோக்கம்
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வலுவான மற்றும் ஒருங்கிணைந்த கிராமப்புற வங்கியை உருவாக்குவதே இந்த இணைப்பின் நோக்கம். இது தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு வங்கிச் சேவைகளை எளிதில் வழங்கும். பல சிறிய வங்கிகளுக்குப் பதிலாக ஒரு பெரிய வங்கியை நிர்வகிப்பதும், அதன் கிளைகளை விரிவுபடுத்துவதும் எளிதாக இருக்கும். சேவையின் தரமும் மேம்படும்.