October Bank Holidays: அக்டோபரில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. இந்த தேதிகளை மறந்துடாதீங்க!

Published : Sep 30, 2026, 06:53 PM IST

October Bank Holidays: அக்டோபர் 2026-ல் வங்கிகளுக்கு 16 மூடல் நாட்கள் உள்ளன. காந்தி ஜெயந்தி, தசரா, ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை தேதிகள் மற்றும் தமிழ்நாட்டுக்கான முக்கிய நாட்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
அக்டோபர் வங்கி விடுமுறை

அக்டோபர் 2026-ல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கிளை சார்ந்த பணிகளை சற்று முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. பண்டிகைகள் அதிகம் வரும் இந்த மாதத்தில், பல்வேறு மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்கள் நாடு முழுவதும் பொருந்தும் நிலையில், சில விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது வங்கி மையங்களுக்கு மட்டுமே பொருந்துகின்றன. இதனால் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 16 மூடல் நாட்கள் இருப்பதாக விடுமுறை பட்டியல்கள் தெரிவிக்கின்றன.

25
தமிழ்நாடு வங்கி விடுமுறை

மாதத்தின் தொடக்கத்திலேயே முக்கியமான விடுமுறை வருகிறது. அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அக்டோபர் 10-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. அதே போல் அக்டோபர் 17-ம் தேதி திரிபுராவில் மகா சப்தமி காரணமாக விடுமுறை உள்ளது. அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆயுத பூஜை, மகா நவமி, துர்கா பூஜை மற்றும் தசரா தொடர்பான விழாக்களுக்காக வங்கிகள் மூடப்படும்.

DMart Offers: ரூ.400 பொருள் வெறும் ரூ.199 மட்டுமே.. மிஸ் பண்ணாதீங்க.. டிமார்ட்டில் அதிரடி சலுகை

35
வங்கி விடுமுறை பட்டியல்

அதன்பிறகு அக்டோபர் 20-ம் தேதி பல மாநிலங்களில் தசரா, விஜயதசமி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்காக வங்கி விடுமுறை வருகிறது. அக்டோபர் 21 முதல் 23 வரை சில குறிப்பிட்ட மாநிலங்களில் துர்கா பூஜை மற்றும் விஜயதசமி காரணமாக கிளைகள் மூடப்படும். அக்டோபர் 24-ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அக்டோபர் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் என்பதால் அன்றும் கிளைகள் இயங்காது.

45
வங்கி விடுமுறை 2026

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முக்கியமான தேதிகள் என்று பார்த்தால், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 10 இரண்டாவது சனிக்கிழமை, அக்டோபர் 19 ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 20 விஜயதசமி ஆகியவை கவனிக்க வேண்டிய நாட்களாக உள்ளன. அக்டோபர் 24 நான்காவது சனிக்கிழமை மற்றும் அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமையும் வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கும். தமிழ்நாட்டின் 2026 அரசு விடுமுறை பட்டியலிலும் அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இடம்பெற்றுள்ளன.

55
ஆர்பிஐ விடுமுறை

அதே நேரத்தில், வங்கி கிளைகள் மூடப்பட்டாலும் அனைத்து வங்கி சேவைகளும் நிறுத்தப்படாது. இணைய வங்கி, கைபேசி வங்கி சேவை, பணப்பரிமாற்றம், கட்டணச் செலுத்துதல், கணக்கு தொடர்பான பல பணிகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளை வழக்கம்போல் பயன்படுத்த முடியும். எனவே, கிளைக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய காசோலை, பணம் செலுத்துதல், ஆவணச் சமர்ப்பிப்பு போன்ற பணிகள் இருந்தால், உங்கள் மாநிலம் மற்றும் வங்கி மையத்துக்கான விடுமுறை தேதியை முன்கூட்டியே பார்த்துக்கொள்வது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories