ஏடிஎம்மில் பணம் எடுத்தால் இனிமேல் ரூ.23 கட்டணம் பிடிக்கப்படும்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

RBI Rules on ATM: ஏடிஎம்மில் பணம் எடுத்தால் இனிமேல் ரூ.23 கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

RBI allows banks to hike ATM charges from may 1 ray

RBI allows banks to hike ATM charges: இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பணபரிவர்த்தனை முறைகளை முழுமையாக கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. யூபிஐ பணபரிவர்த்தனை மூலம் நாம் வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுகிறோம். இது மட்டுமின்றி மின்சார கட்டணம், ரீசார்ஜ் கட்டணம் என அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் யூபிஐ பேமெண்ட் மூலம் செய்து விட முடிகிறது.

RBI allows banks to hike ATM charges from may 1 ray
RBI Rules On ATM

ஒருபக்கம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை வேகமாக வளர்ந்து வந்தாலும் மக்களின் கைகளில் ரொக்க பணம் இருப்பதும் அத்தியாவசியமாகியுள்ளது. ரொக்க பணப்புழக்கம் காரணமாக மக்கள் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்கின்றனர். இப்படி சொந்த வங்கியின் ஏடிஎம் மூலம் ஒரு மாதத்தில் 5 முறை பணம் எடுத்தால் பிரச்சினை இல்லை. ஆனால் 5 முறைக்கு மேல் பணம் எடுக்கும்போது சேவை கட்டணம் என்ற பெயரில் சிறிய தொகையை வங்கிகள் பிடித்தம் செய்து வந்தன. 

இந்நிலையில், ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது பிடிக்கப்படும் சேவை கட்டணத்தை அதிகரித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது ஏடிஎம் மூலம் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 21 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் 23 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும், ஐரோப்பாவிற்கும் 'க்ளீன் டெக் கிராண்ட் பேரம்' ஏன் முக்கியம்?


ATM Charges Hike

தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் வரும் மே மாதம் 1ம் தேதியில் இருந்து உங்களின் சொந்த வங்கியின் ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டும். மாதத்திற்கு 5 முறை பணத்தை இலவசமாக எடுக்கலாம். 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 23 ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

Reserve Bank of India Rules

அதே வேளையில் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் அல்லாமல் வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்கும்போது மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்தில் 3 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். 3 முறைக்கு மேல் என்றால் 23 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இதுவே மெட்ரோ அல்லாத ரூரல் நகரங்கள் என்றால் 5 முறை பணம் எடுக்க கட்டணம் கிடையாது. 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்! சம்பளம் கிடுகிடுன்னு எகிறப்போகுது! அகவிலைப்படி உயர்வு

Latest Videos

vuukle one pixel image
click me!