இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்கள் மே 31, 2025க்குள் ஒரு குறிப்பிட்ட வங்கி இருப்பை பராமரிக்க வேண்டும் என்ற புதிய விதியை வெளியிட்டுள்ளது. இதனை தவறினால் வங்கி கணக்கு தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மே 31க்குள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன. இல்லையெனில் கடும் அபராதம் விதிக்கப்படலாம்.
25
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
இந்த விதியைப் பின்பற்றத் தவறினால் வாடிக்கையாளர்கள் பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. என்ன அந்த விதி? மே மாதம் முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருமா? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? என்பது குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வது அவசியம்.
35
மே 31 கடைசி தேதி
மே 31 ஆம் தேதிக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் 436 ரூபாய் இல்லையென்றால், பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமாவில் முதலீடு செய்திருந்தால், இந்தத் தொகை உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.
இந்தத் தேதிக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் 436 ரூபாய் இல்லையென்றால், உங்கள் பாலிசி தானாகவே ரத்து செய்யப்படும். இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியாது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது. வருடத்திற்கு 436 ரூபாய் பிரீமியம் செலுத்தி, 2 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீட்டைப் பெறலாம்.
55
காப்பீடு ரத்து செய்யப்படும்
இந்தக் காப்பீடு எந்தக் காரணத்தினாலும் ஏற்படும் இறப்பையும் உள்ளடக்கியது. இது ஒரு வருடத் திட்டம். ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் தானாகவே பிடித்தம் செய்யப்படும். எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.