700 Rupee Note: இனி ரூ.500க்கு பதில் 700 ரூபாய் நோட்டா? வைரலாகும் போட்டோ! RBI சொன்னது என்ன?

Published : Jun 02, 2026, 11:44 AM ISTUpdated : Jun 02, 2026, 12:09 PM IST

700 Rupee Note: சமூக வலைதளங்களில் 700 ரூபாய் நோட்டின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ரிசர்வ் வங்கி விரைவில் இந்த நோட்டை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
16
700 ரூபாய் நோட்டு
100, 200, 500 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி 700 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தப் போவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தவே இந்த நடவடிக்கை என்றும் அந்த பதிவில் கூறப்படுகிறது.
26
100, 200, 500 ரூபாய் நோட்டுகளை போலவே...

இணையத்தில்  வைரலாகும் இந்த நோட்டில் 100, 200, 500 ரூபாய் நோட்டுகளைப் போலவே காந்தியின் படம் உள்ளது. நோட்டின் பின்புறம், கர்நாடகாவின் மைசூரு அருகே உள்ள ஹோசா கன்னம்பாடியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலின் படம் இடம்பெற்றுள்ளது. விஜேந்திர படேல் என்பவர் தனது X பக்கத்தில் இந்த படத்தை பகிர்ந்துள்ளார்.

36
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய திட்டம்

சில காலத்திற்கு முன்பு, ரூபாய் நோட்டுகளின் ஆயுளை அதிகரிக்கவும், செலவைக் குறைக்கவும் ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய் திட்டமிட்டது. இந்த நோட்டுகள் காகித நோட்டுகளை விட மூன்று மடங்கு நீடித்து உழைக்கும் என கூறப்பட்டது.

46
எந்தெந்த நாடுகளில் பிளாஸ்டிக் நோட்டுகள்?
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற பல நாடுகளில் பிளாஸ்டிக் நோட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவிலும் இது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 700 ரூபாய் நோட்டு செய்தி வந்துள்ளது.
56
உண்மையில் இந்த நோட்டு வெளியாகுமா?
புதிய 700 ரூபாய் நோட்டு வந்தால் சில்லறை தட்டுப்பாடு பிரச்சனை தொடரும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்த நோட்டு வெளியாகுமா என்பதே பெரிய கேள்வி.
66
ரிசர்வ் வங்கி அறிவிப்பு இல்லை
700 ரூபாய் நோட்டு வெளியிடுவதாக வரும் தகவல் முற்றிலும் பொய். ரிசர்வ் வங்கி இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என உண்மை சரிபார்ப்பு நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories