ரத்தன் டாடா மறைவுக்குப் பின்னர் சரிகிறதா டாடா சாம்ராஜ்யம்; ஊழியர்கள் வேலையிழப்பு!!

Published : Apr 10, 2025, 01:41 PM IST

டாடா ஸ்டீல் நெதர்லாந்து நிறுவனம் 1600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. பசுமை எஃகு உற்பத்தியில் கவனம் செலுத்தி, செயல்திறனை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

PREV
15
ரத்தன் டாடா மறைவுக்குப் பின்னர் சரிகிறதா டாடா சாம்ராஜ்யம்; ஊழியர்கள் வேலையிழப்பு!!
Tata Steel after Ratan Tata

டாடா ஸ்டீல் நெதர்லாந்து நிறுவனம், அதன் மேலாண்மை மற்றும் ஆதரவுத் துறைகளில் சுமார் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது செலவுகளைக் குறைத்தல், பணியாளர்களை மாற்றுதல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இத்துடன் பசுமை எஃகு உற்பத்தியை நோக்கி ஒரு பெரிய மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது.

25
Tata Steel IJmuiden

அதன் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனம் அதன் IJmuiden ஆலையில் உள்ள இரண்டு ஊது உலைகளில் ஒன்றை DRI மற்றும் EAF அலகுகள் கொண்டதாக மாற்ற இருக்கிறது. 2030ஆம் ஆண்டிற்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

35
Tata Steel Employees

பசுமை உற்பத்திக்கான இந்தப் மாற்றத்தை மேற்கொள்ள IJmuiden ஆலை சரியான இடத்தில் உள்ளது. ஆழ்கடல் துறைமுகம் அருகில் இருப்பது, முக்கிய ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு அருகாமையில் இருப்பது, கடல் காற்றாலை ஆற்றலின் வளர்ச்சி ஆகியவை இதற்குச் சாதகமாக உள்ளன. ஐரோப்பாவிலேயே குறைவாக கார்பன் வெளியேற்றத்துடன் எஃகு உற்பத்தி செய்யும் மையமாக மாறுவதற்கு டாடா ஸ்டீல் முயற்சி செய்கிறது.

45
Tata Steel restructuring

காற்றின் தரத்தை மேம்படுத்தவும், அருகிலுள்ள சமூகங்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் சட்ட விதிகளுக்கு அப்பால் கூடுதல் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தை ஆதரிப்பதற்கான கொள்கை மற்றும் நிதி ஆதரவிற்காக டச்சு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

55
Tata Steel lay offs

"இந்த மாற்றம் எதிர்காலத்திற்கான ஒரு படிக்கல்" என்று டாடா ஸ்டீலின் தலைமை நிர்வாக அதிகாரியும் டாடா ஸ்டீல் நெதர்லாந்தின் மேற்பார்வை வாரியத் தலைவருமான டிவி நரேந்திரன் கூறியுள்ளார். "டாடா ஸ்டீல் நெதர்லாந்தை ஐரோப்பாவின் மிகவும் திறமையான மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள எஃகு உற்பத்தியாளராக மாற்றுவதையே எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories