Raksha Bandhan 2024
ரக்சா பந்தன் அல்லது ராக்கி என்று அழைக்கப்படும் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 19) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ரக்சா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவைக் கொண்டாடும் ஒரு இந்து மத பண்டிகையாகும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலில், ரக்சா பந்தன், ஜூலானா பூர்ணிமா மற்றும் பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாளின் போது பல்வேறு நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு ஆகஸ்ட் 19 அன்று விடுமுறை என அறிவித்துள்ளது.
Bank Holiday
சில மாநிலங்களில், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மற்ற மாநிலங்களில், வங்கிகள் வழக்கம் போல் திறந்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி, திரிபுரா (அகர்தலா), குஜராத் (அகமதாபாத்), மத்தியப் பிரதேசம் (போபால்), ஒடிசா (புபனேஷ்வர்), உத்தரகாண்ட் (டேராடூன்), ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்), உத்தரப் பிரதேசம் (கான்பூர், லக்னோ), மற்றும் ஹிமாச்சல பிரதேசம் (சிம்லா) ரக்ஷா பந்தன் காரணமாக மூடப்பட்டிருக்கும்.
Raksha Bandhan Bank Holiday
ஆகஸ்ட் 2024ல் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை பார்க்கலாம். ஆகஸ்ட் 20 (செவ்வாய்கிழமை): ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு, கொச்சியில் வங்கிகள் இயங்காது. ஆகஸ்ட் 24 (சனிக்கிழமை): நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
August 2024
ஆகஸ்ட் 26 (திங்கட்கிழமை): குஜராத், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். ஸ்ரீநகர் ஜென்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு விடுமுறை ஆகும்.
கடன் வாங்கும் விதிகளை அதிரடியாக மாற்றிய ரிசர்வ் வங்கி.. என்ன தெரியுமா?