ரயில்வே பட்ஜெட் 2025: நவீன ரயில்களுடன் ஸ்டேஷன்களை மேம்படுத்த முக்கியத்துவம்!

First Published | Jan 16, 2025, 11:55 PM IST

Railway Budget 2025 expectations: வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் 2025-26 நிதி ஆண்டுக்கான மூலதனச் செலவின ஒதுக்கீட்டில் 15-20% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறைக்கான மொத்த ஒதுக்கீடு, நடப்பு நிதியாண்டின் ரூ.2.65 லட்சம் கோடியிலிருந்து, ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும் எனக் கருதப்படுகிறது.

Railway Budget 2025

வரவிருக்கும் நிதி ஆண்டில் இந்திய ரயில்வே, ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், நவீன ரயில்களை அறிமுகப்படுத்துதல், ரயில்பாதையில் நெட்வொர்க் நெரிசலைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Indian Railways

இந்திய ரயில்வேயின் பட்ஜெட் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு, பாதை விரிவாக்கம், தற்போதுள்ள உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல், இன்ஜின்கள், பெட்டிகள் மற்றும் வேகன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை வாங்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Tap to resize

Modern trains

2025-26 பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான ஒதுக்கீடு 20% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024-25 நிதி ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2.65 லட்சம் கோடியில் இன்றுவரை தோராயமாக 80% பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே தரவுகள் குறிப்பிடுகின்றன. அதாவது, நடப்பு நிதியாண்டில் ரயில்வே வாரியம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. இந்த நிதியாண்டு முடிவதற்குள் இலக்கு எட்டப்படும் என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Upgraded Railway stations

இந்திய ரயில்வேயின் நடப்பு நிதியாண்டின் PPP மூலதனச் செலவு இலக்கு ரூ.10,000 கோடியாக இருந்தது. ஜனவரி நடுப்பகுதியில் கிட்டத்தட்ட 90% எட்டப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் திட்டச் செலவில் ரோலிங் ஸ்டாக் ரூ.50,903 கோடி அடங்கும். திறன் மேம்பாடு, புதிய பாதைகள், கேஜ் மாற்றம், வழித்தட விரிவாக்கம், மின்மயமாக்கல் உள்ளிட்டவற்றிற்காக ரூ.1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளுக்கு ரூ.34,412 கோடி கிடைத்தது.

Railway tracks

இந்திய ரயில்வே புல்லட் ரயில் திட்டத்தை மேற்பார்வை செய்யும் நேஷனல் ஹை ஸ்பீட் ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) க்கு 2024-25 நிதியாண்டில் 21,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்நிலையில், 2025-26 மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்த நிதியில் கணிசமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Railways Budget

அடுத்த நிதியாண்டில், நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்க ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்கவும், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கணிசமான மூலதன முதலீடுகளை பராமரிக்க வணிக சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Nirmala Sitharaman Budget 2025

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இந்த நிதியாண்டில் 6.4% ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மூலதனச் செலவினங்களுக்காக அரசாங்கம் ரூ.11.1 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. 2026 நிதியாண்டில் பொது தனியார் கூட்டாண்மை (PPP) முதலீடுகளுக்கான அதிகரித்த இலக்கைக் காணவும் ன எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!