எஸ்பிஐ ரிவார்ட்ஸ் மோசடி! வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

First Published | Jan 16, 2025, 7:35 PM IST

பத்திரிக்கை தகவல் பணியகம் (PIB) பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மோசடி தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்களை ஏமாற்ற சைபர் கிரைமினல்கள் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கியுள்ளது.

PIB alert SBI Customers

பத்திரிக்கை தகவல் பணியகம் (PIB) பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மோசடி தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்களை ஏமாற்ற சைபர் கிரைமினல்கள் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கியுள்ளது.

Malicious APK files

மோசடி செய்பவர்கள் ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களை குறிவைத்து, 'எஸ்பிஐ ரிவார்ட்ஸ்' என்ற மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யும்படி மெசேஜ் அனுப்புகின்றனர்.

“எஸ்பிஐ ரிவார்டுகளைப் பெறுவதற்கு APK கோப்பைப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும்படி மெசேஜ் வந்திருக்கிறதா? அதில் உள்ள கோப்புகளை டவுன்லோட் செய்யாதீர்கள், இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள்" என்று பிஐபி (PIB) எச்சரித்துள்ளது.

Tap to resize

SBI Rewards Scam

கிரிமினல்கள் அனுப்பும் போலியான செய்தி எப்படி இருக்கும் என்பதை PIB எடுத்துக்காட்டியுள்ளது.

“அன்புள்ள மதிப்புமிக்க வாடிக்கையாளர்களே, உங்கள் SBI நெட்பேங்கிங் ரிவார்ட் புள்ளிகள் (ரூ. 9980) இன்று காலாவதியாகிவிடும்! இப்போது எஸ்பிஐ ரிவார்டு ஆப் இன்ஸ்டால் செய்து அதை ரிடீம் செய்யுங்கள். அது உங்கள் கணக்கில் ரொக்கமாக டெபாசிட் செய்யப்படும். நன்றி."

APK file scam

APK கோப்பு மோசடியில், தீங்கிழைக்கும் மொபைல் செயலியை டவுன்லோட் செய்யும் நபர்களை ஏமாற்றுகிறார்கள். போலி APK கோப்பை டவுன்லோட் செய்யும்படி வரும் எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் இந்த மோசடி நடக்கிறது. அந்த APK கோப்பை டவுன்லோட் செய்து நிறுவினால், பயனரின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படலாம். வங்கித் தகவல், தொடர்பு எண்கள் போன்றவற்றையும் திருடப்பட வாய்ப்பு உள்ளது.

APK files

பயனர்கள் அதிகாரப்பூர்வமான, நம்பகமான Google Play Store போன்ற தளங்களில் இருந்து APK கோப்புகளை டவுன்லோட் செய்யலாம். ஆனால், வேறு எங்கிருந்தாவது APK கோப்புகளை டவுன்லோட் செய்தால், அவை பாதுகாப்பாக இருக்கும் என்று உத்தரவாதம் இல்லை. பிற ஆப் ஸ்டோர்களில் செயலிகளை அணுகுவது பாதுகாப்பு அபாயங்களையும் உள்ளடக்கி இருக்கிறது.

Online scam

கடந்த ஆண்டு ஆகஸ்டில், பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) தனது வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற மோசடி தொடர்பாக எச்சரிக்கை விடுத்தது. சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் APK கோப்புகளை விநியோகிப்பதாக வாடிக்கையாளர்களை எச்சரித்தது.

Latest Videos

click me!