ஆண்டுக்கு 436 ரூபாய் செலுத்தினால் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

First Published | Dec 7, 2024, 5:02 PM IST

மத்திய அரசின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் 2 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு கிடைக்கிறது. ஆண்டுதோறும் 500 க்கும் குறைவான பிரீமியம் செலுத்தினால் போதும். இத்திட்டத்தைப் பற்றி இத்தொகுப்பில் விரிவாக அறியலாம்.

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana

ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY):

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது ஒரு காப்பீட்டுத் திட்டமாகும், இது ஏதேனும் காரணத்தால் ஏற்படும் மரணத்திற்கு ஆயுள் காப்பீடு வழங்குகிறது. இது ஒரு வருட காப்பீடு, ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது. இது ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. 18 முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் மூலம் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

PMJJBY Scheme

பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்றால் என்ன?

பிரதமரின் ஜீவன் பீமா யோஜானா (PMJJBY) காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட அனைத்து சந்தாதாரர்களுக்கும் ரூ. 2 லட்சம் வாழ்நாள் காப்பீடு வழங்கப்படுகிறது. எந்த காரணத்தினால் மரணம் ஏற்பட்டாலும் இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.

Tap to resize

PMJJBY premium

ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் பிரீமியம் எவ்வளவு?

இத்திட்டத்தில் சேரும் பாலிசிதாரர்கள் ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ரூ.436 மட்டுமே. பிரீமியம் தொகையை ஆண்டுதோறும் தானாகவே சேமிப்புக் கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளும் ஆட்டோ பேமெண்ட் வசதியும் உள்ளது.

PMJJBY Delayed enrolment

PMJJBY காப்பீட்டுக்கு எப்போது பதிவு செய்யவேண்டும்?

முழு ஆண்டுக்கான காப்பீட்டைப் பெற ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பதிவுசெய்ய வேண்டும். இதற்கான பிரீமியமாக ரூ.436 செலுத்த வேண்டும். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பதிவு செய்வதற்கு ரூ. 342 பிரீமியம் செலுத்த வேண்டும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பதிவு செய்வதற்கான பிரீமியம் ரூ. 228. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பதிவு செய்வதற்கான பிரீமியம் ரூ.114.

Jeevan Jyoti Bima Yojana

PMJJBY திட்டத்தில் சேர வயது வரம்பு என்ன?

பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜானா (PMJJBY) காப்பீட்டுத் திட்டத்தில் சேர, விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தனது பெயரில் தனியாக வங்கி அல்லது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

PMJJBY new subscribers

புதிய பாலிசிதாரர்களுக்கான நிபந்தனைகள் என்னென்ன?

ஜூன் 1, 2016 அன்று அல்லது அதற்குப் பிறகு முதல் முறையாக பதிவு செய்யும் சந்தாதாரர்களுக்கு, திட்டத்தில் பதிவுசெய்த நாளிலிருந்து முதல் 30 நாட்களில் ஏற்படும் மரணத்திற்கு, காப்பீட்டுப் பலன் கிடைக்காது. விபத்து போன்ற தற்செயலான காரணங்களால் ஏற்படும் மரணத்துக்கு திட்டத்தில் இணைந்த முதல் நாளிலிருந்து காப்பீடு கவர் செய்யப்படும்.

PMJJBY insurance

PMJJBY திட்டத்தில் சேருவது எப்படி?

வங்கிக் கணக்கு மூலம் ஆன்லைனில் இத்திட்டத்தில் இணையலாம். உங்கள் வங்கியின் நெட்பேங்கிங் வசதியைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே PMJJBY திட்டத்தின் கீழ் காப்பீட்டைப் பெறலாம்.

ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் போஸ்ட் ஆபிஸ் அல்லது வங்கியை அணுகலாம்.

https://www.jansuraksha.gov.in/Files/PMJJBY/English/ClaimForm.pdf

Latest Videos

click me!