ரூ.41 லட்சம் ஓய்வூதிய நிதியைத் திரட்ட உதவும் PPF திட்டம்! முதலீடு செய்வது எப்படி?

First Published | Nov 5, 2024, 2:05 PM IST

PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி மத்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஆபத்து இல்லாத முதலீட்டு வாய்ப்பு ஆகும். இது ஒரு வரி சேமிப்பு கருவியாகவும் பயன்படும். இதில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்தால், ரூ.41 லட்சம் வரை ஈட்டலாம்.

Public Provident Fund

PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி மத்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஆபத்து இல்லாத முதலீட்டு வாய்ப்பு ஆகும். இது ஒரு வரி சேமிப்பு கருவியாகவும் பயன்படும். இதில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்தால், ரூ.41 லட்சம் வரை ஈட்டலாம்.

Pension planning

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கு மத்திய அரசு ஆதரவு பெற்ற வரி சேமிப்பு கருவியாகும். இதனால் இந்தச் சிறு சேமிப்பு திட்டம் ஆபத்து இல்லாத முதலீடாகவும் நீண்ட கால வருமானத்தை வழங்குவதாகவும் உள்ளது. ​​PPF கணக்கில் வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது. இந்தக் கணக்கின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள், மேலும் ஐந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம். இது ஓய்வூதிய நிதியைத் திரட்டுவதற்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

Tap to resize

PPF account

பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) மாதந்தோறும் ₹12,500 முதலீடு செய்தால், ரூ.41 லட்சத்தை ஓய்வூதிய நிதியாகப் பெறலாம். ஒரு முதலீட்டாளர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒரே ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

PPF investment

PPF கணக்கு தொடங்கி 15 ஆண்டுகளில் திட்டம் முதிர்வடைந்ததும், மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம். தற்போதைய PPF வட்டி விகிதம் 7.1% ஆண்டுதோறும் கிடைக்கும். இவ்வாறு தொடர்ந்து நீட்டித்து வந்தால் 30 ஆண்டுகளில் ரூ.1.5 கோடியைச் சம்பாதிக்கலாம். இந்த முதலீட்டு அரசாங்கத்தின் உத்தரவாதமான பாதுகாப்பும் இருப்பது குறிப்பிட்டத்தக்கது.

PPF tax benefits

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் வரி செலுத்துவோர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு இதன் மூலம் கிடைக்கும் வரிச்சலுகையும் ஒரு காரணம். PPF திட்டம் ஒரு EEE திட்டம் ஆகும். இத்திட்டத்தின் முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகியவற்றுக்கு வரி விலக்கு பெறமுடியும். சட்டப்பிரிவு 80C இன் கீழ், ஒரு நிதி ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Latest Videos

click me!