தினமும் 333 சேமித்தால் 17 லட்சம் கிடைக்கும்! இது போஸ்ட் ஆபிஸ் ஸ்பெஷல் திட்டம்!

First Published | Nov 11, 2024, 8:09 AM IST

சிறிய அளவிலான பணத்தைச் சேமிப்பதன் மூலம் ஒரு பெரிய தொகையைத் திரட்ட விரும்பினால், போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்புத் திட்டம் (RD) சிறந்த வழி. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமித்து, நிலையான வட்டியுடன் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.

Post Office Schemes

ஒருவருடைய வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை சேமித்து அதைத் தொடர்ந்து முதலீடு செய்வது நிதி பாதுகாப்பிற்கு முக்கியமானது ஆகும். இன்று பலர் ரிஸ்க் அதிகம் இல்லாத, நம்பகமான முதலீட்டை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்க ஆதரவு பெற்ற திட்டங்கள் உள்ளன.

Post Office Recurring Deposit

போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் (RD) பிரபலமான தேர்வாக உள்ளது. இத்திட்டத்தில் வெறும் 333 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம், 10 ஆண்டுகளில் ரூ.17 லட்சத்துக்கு மேல் திரட்டலாம்.

Latest Videos


Recurring Deposit Scheme

மற்ற அனைத்து தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களைப் போலவே, போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்திலும் முதலீடுகளின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது. இது முற்றிலும் சந்தை ஆபத்து இல்லாத திட்டம் ஆகும். நிலையான வருமானம் வழங்கும் திட்டத்தை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

Post Office RD Interest

இந்த திட்டத்திற்கான ஆரம்ப முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, குறைந்தபட்சம் ரூ.100 மாதாந்திர வைப்புத்தொகையுடன் கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டம் தனியாகவோ கூட்டாகவோ கணக்கு தொடங்க முடியும். தற்போது, ​​இந்தத் திட்டத்தில் 6.8% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது.

Post Office RD investment

இத்திட்டத்தில் தினசரி முதலீடு ரூ.333 முதலீடு செய்தால் மாதாந்திர முதலீடு சுமார் 10,000 ரூபாயாக இருக்கும். ஓராண்டில் ரூ.1.20 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதேபோல 5 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால்  மொத்தம் ரூ.7,14,827 கிடைக்கும். இதில் வட்டி விகிதம் மூலம் கிடைத்த வருமானம் மட்டும் ரூ.1,15,427.

முதிர்வுக் காலத்துக்குப் பின் முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 10 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.12 லட்சம் ஆகும். இதற்கு 6.8% வட்டி விகிதம் மூலம் ரூ.5,08,546 வருமானம் கிடைக்கும். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.17,08,546 முதிர்வுத் தொகையைப் பெறலாம்.

Post Office Savings Scheme

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டத்தில் மாதாந்திர தவணைகளை சரியான நேரத்தில் டெபாசிட் செய்யவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தவணையைச் செலுத்தத் தவறினால், மாதத்திற்கு 1% அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து நான்கு மாதம் டெபாசிட் செய்யத் தவறினால் கணக்கு தானாகவே மூடப்படும்.

click me!