Post Office Scheme
ஒவ்வொரு மாதமும் பணம் வரும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களா? உங்கள் பணமும் பாதுகாப்பானது. அஞ்சல் அலுவலகம் உங்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தை வழங்குகிறது. தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பெறுவீர்கள். ஓய்வுக்குப் பிறகு வழக்கமான மாத வருமானம் பெறுவது சவாலான பணியாகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது ஓய்வூதியத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கும் திட்டமாகும். ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 எடுத்துக் கொள்ளலாம்.
Senior Citizen Schemes
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் 20,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் 8.2 சதவீதம். எந்தவொரு அரசாங்க திட்டங்களில் வழங்கப்படும் அதிகபட்ச வட்டி இதுவாகும். இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
SCSS Account
இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. தற்போது ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2,46,000 வட்டி கிடைக்கும். இதன்படி, ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு சுமார் ரூ.20,500 மாத வருமானம் கிடைக்கும். இந்தப் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வந்து சேரும். உங்கள் ஓய்வுக்குப் பிறகு வழக்கமான செலவுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
Senior Citizens monthly income
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது தவிர, 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்குச் சென்று இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.
Senior Citizen Savings Scheme
இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கும் வரி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், இத்திட்டத்தில் வரிச்சலுகையும் உள்ளது. இதன் மூலம் கணிசமான அளவுக்கு வரிப்பணத்தை மிச்சப்படுத்தலாம்.
SCSS scheme investment
போஸ்ட் ஆபிஸ் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SSCS) பணி ஓய்வுக்குப் பிறகு நிலையான மாதாந்திர வருமானம் பெறுவதற்கு ஏற்ற பாதுகாப்பான திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது, உங்களின் ஓய்வுக் காலத்தில் நிதி ரீதியாக பாதுகாப்பை உறுதிசெய்யும்.