KVP Scheme: இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்த தொகை, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இரட்டிப்பாகும். குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் தொடங்கலாம். யார் இந்த திட்டத்தில் சேரலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை, சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
பாதுகாப்பான முதலீட்டையும், உறுதியான வருமானத்தையும் விரும்பும் முதலீட்டாளர்களுக்காக அஞ்சலகம் வழங்கும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் நீண்டகால சேமிப்புக்கான பிரபலமான தேர்வாக உள்ளது. மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை, நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாகும்.
25
கிசான் விகாஸ் பத்ரா
தற்போது கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தின் அடிப்படையில், முதலீட்டுத் தொகை 115 மாதங்களில் (9 ஆண்டுகள் 7 மாதங்கள்) இரட்டிப்பாகும். உதாரணமாக, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் சுமார் ரூ.2 லட்சம் கிடைக்கும். மேலும், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் சுமார் ரூ.10 லட்சம் பெறலாம். இருப்பினும், இந்த கணக்கீடு தற்போதைய வட்டி விகிதத்தை கொண்டது. வட்டி விகிதங்கள் அரசின் காலாண்டு அறிவிப்புகளுக்கு ஏற்ப மாறக்கூடும்.
இந்த திட்டத்தில் 18 வயதுக்கு மேல் எந்த இந்திய குடிமகனும் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000. அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. தனிநபர் கணக்கு மட்டுமின்றி, கூட்டுக் கணக்கையும் தொடங்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் முக்கிய மத்திய அம்சங்களில் ஒன்று, முதலீட்டிற்கு அரசின் உத்தரவாதம் வழங்கப்படுவது. இதனால் சந்தை ஏற்ற இறக்கங்களால் முதலீடு பாதிக்கப்படாது. மேலும், அவசர நிதி தேவைப்பட்டால், கிசான் விகாஸ் பத்ரா சான்றிதழை அடமானமாக வைத்து சில வங்கிகளில் கடன் பெறும் வசதியும் இருக்கலாம். இதற்கான விதிமுறைகள் சம்பந்தப்பட்ட வங்கியைப் பொறுத்து மாறுபடும்.
55
அஞ்சலகத்தில் சேமிப்பை தொடங்கலாம்
இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் அருகிலுள்ள அஞ்சலகத்திற்கு சென்று ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். முதலீடு செய்வதற்கு முன், தற்போதைய வட்டி விகிதம் மற்றும் திட்ட விதிமுறைகளை அஞ்சலகம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் சரிபார்ப்பது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.