சிறு வியாபாரிகளுக்கு ரூ.30,000 உடனடி கடன்! UPI கிரெடிட் கார்டு மூலம் வழங்கும் மத்திய அரசு!

Published : Feb 17, 2025, 09:44 PM IST

PM SVANidhi scheme: கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தெருவோர வியாபாரிகளுக்கு உதவ தொடங்கப்பட்ட பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டம், பிணையம் இல்லாத நுண் கடன்களை வழங்குகிறது. சரியான நேரத்தில் கடன் திருப்பிச் செலுத்துவோருக்கு கூடுதல் கடன் தொகை, கேஷ்பேக் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. 2025 பட்ஜெட்டில், இத்திட்டத்தின் கீழ் UPI உடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
16
சிறு வியாபாரிகளுக்கு ரூ.30,000 உடனடி கடன்! UPI கிரெடிட் கார்டு மூலம் வழங்கும் மத்திய அரசு!
PM SVANidhi Scheme Loan for Street Vendors

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டம், ஒரு நுண் கடன் திட்டமாகும். கோவிட்-19 ஊரடங்கின் போது பின்னடைவைச் சந்தித்த தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் தங்கள் தொழில்களை மீண்டும் தொடங்கி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

26
PM SVANidhi scheme cashback

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பிணையம் இல்லாத மற்றும் குறைந்த வட்டியில் கடன்களை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கடன்கள் மூன்று தவணைகளில் வழங்கப்படுகின்றன. முதல் தவணையில், அதிகபட்சமாக ரூ.10,000 கிடைக்கும். அதைத் தொடர்ந்து ரூ.20,000, பின்னர் மூன்றாவது தவணையில் ரூ.50,000 வரை கடன்பெற முடியும். இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு வேறுபடும்.

36
PM SVANidhi scheme interest subsidy

இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது அடுத்த தவணையில் அதிக கடன் தொகையைப் பெற உதவுகிறது. மேலும், சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தினால் ஆண்டுதோறும் ரூ.1200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கூடுதலாக, கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தியதற்கான போனஸாக 7% வருடாந்திர வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

46
PM SVANidhi scheme eligibility

மார்ச் 24, 2020 அன்று அல்லது அதற்கு முன் நகர்ப்புறங்களில் பணிபுரியும், பழங்கள், காய்கறிகள் மற்றும் தயார் நிலை உணவுப் பொருள்களை தெருவோரங்களில் வைத்து விற்கும் வியாபாரிகள், முடிதிருத்தும் கடைகள், சலவைத் தொழிலாளர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி பெற்றவர்கள்.

56
PM SVANidhi scheme update

அண்மையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2025 மத்திய பட்ஜெட் உரையில், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கிரெடிட் கார்டுகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். "பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டம் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு வியாபாரிகளுக்கு பயனளித்துள்ளது. அதிக வட்டி விகிதத்துடன் முறைசாரா கடன்களைப் பெறுவதிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது" என்று கூறினார்.

66
PM SVANidhi scheme beneficiaries

மேலும், "இத்திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், ரூ. 30,000 வரம்புடன் UPI உடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளை வ?வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கிகளின் ஆதரவுடன் இத்திட்டம் புதுப்பிக்கப்படும்" என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் சிறு வியாபாரிகள், KYC சரிபார்ப்புகாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது நூறு நாள் வேலை திட்ட அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories