மத்திய அரசு பென்ஷன் திட்டங்களின் பெயரில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி!

Published : Feb 17, 2025, 06:51 PM ISTUpdated : Feb 17, 2025, 07:09 PM IST

NPS scams: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), அதன் பெயரைப் பயன்படுத்தி மோசடியான குறுஞ்செய்தி, போன் அழைப்புகள், மின்னஞ்சல்கள், வலைத்தளங்கள், மொபைல் செயலிகள் மூலம் சைபர் தாக்குதல்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

PREV
14
மத்திய அரசு பென்ஷன் திட்டங்களின் பெயரில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி!
NPS Scam

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் அடல் ஓய்வூதிய யோஜனா (APY) திட்டங்களின் கீழ் ஓய்வூதிய நிதியை விடுவிக்க பணம் கோரும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி வலைத்தளங்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் NPS / APY சந்தாதாரர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது.

24
PFRDA alert

ஜனவரி 31, 2025 அன்று ஓய்வூதிய ஆணையம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "PFRDA / NPS / APY பெயரில் மோசடி திட்டங்களை மூலம் மோசடி நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் SMS, போன் அழைப்புகள், வலைத்தளங்கள், மொபைல் செயலிகள், பேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் மோசடிகள் செய்யப்படுகின்றன என்றும் கூறியுள்ளது.

34
PFRDA warning on NPS

PFRDA-வின் ஒரே அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.pfrda.org.in ஆகும். இந்த டொமைன் முகவரியில் எளிதில் கவனிக்க முடியாத மாற்றங்களுடன், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை போல தோற்றம் அளிக்கும் போலி வலைத்தளங்களில் ஃபிஷிங் முயற்சிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனவும் PFRDA குறிப்பிட்டுள்ளது.

PFRDA அனுப்பும் எஸ்எம்எஸ் அனைத்தும் PFRDAI என்ற ஐடியுடன் அனுப்பப்படும் என்றும், சந்தாதாரர்கள் பதில்களை அனுப்புவதற்கு முன்பு சரிபார்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

44
PFRDA Guidelines

சைபர் மோசடியைத் தவிர்க்க, NPS/APY திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் நிதித் தரவுகளையும் பகிர்வதைத் தவிர்க்கவும். சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டறிந்தால் உடனடியாக தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் புகார்களைப் பதிவு செய்ய ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

சைபர் மோசடிக்கு ஆளானால், உடனே உங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை முடக்கி, ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் பாஸ்வேர்டுகளை மாற்றவும்.

click me!

Recommended Stories