பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் அடுத்த தவணைத் தொகையான 2000 ரூபாய், அக்டோபர் 30-ம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவுள்ளது. ஆனால், இந்த பணத்தை வாங்க விவசாயிகள் இதையெல்லாம் செய்யனுமாம்.!
நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் அடுத்த தவணைக்காக காத்திருக்கிறார்கள். அக்டோபர் 30-ம் தேதி விவசாயிகளின் அக்கவுண்ட்டில் 2000 ரூபாய் வரவுள்ளது. ஆனால், இந்த பணத்தை வாங்க விவசாயிகள் ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டும்.
25
e-KYC முடிக்கவில்லை என்றாலோ பணம் வர தாமதமாகலாம்
அரசு தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் 2000 ரூபாயை நேரடியாக அனுப்பவுள்ளது. ஆனால், பணம் போடும் தேதி அறிவித்துவிட்டார்கள் என்பதற்காக பதிவு செய்த அனைவருக்கும் பணம் வந்துவிடாது. உங்கள் ஆவணங்கள் முழுமையாக இல்லை என்றாலோ அல்லது e-KYC முடிக்கவில்லை என்றாலோ பணம் வர தாமதமாகலாம்.
35
இந்த முறை பணம் வாங்க சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்
விவசாயிகள் இந்த முறை பணம் வாங்க சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஆதார் கார்டுடன் வங்கிக் கணக்கை இணைப்பது மற்றும் நில ஆவணங்களை சரிபார்ப்பது ரொம்ப முக்கியம். விண்ணப்பத்தில் கொடுத்த தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். அதில் ஏதாவது தப்பு இருந்தால் பணம் வர லேட் ஆகும்.
விவசாயிகள் pmkisan.gov.in என்ற வெப்சைட்டுக்கு போய் தங்கள் ஸ்டேட்டஸை செக் பண்ணலாம். முதலில் வெப்சைட்டை ஓபன் செய்து 'know your status' ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. உங்கள் பதிவு எண்ணை (Registration number) கொடுத்து, ஸ்கிரீனில் தெரியும் கேப்ட்சா கோடை டைப் செய்து 'Get OTP' கொடுங்க. ஓடிபி வந்ததும் அதை உள்ளீடு செய்தால் உங்கள் ஸ்டேட்டஸ் தெரிந்துவிடும்.
55
தவணைத் தொகை கிடைப்பதில் தாமதம்
விவசாயிகள் பிஎம் கிசான் உதவித்தொகையை வாங்க விண்ணப்பிக்கும் போது எல்லா தகவல்களையும் சரியாக கொடுக்க வேண்டும். தனிப்பட்ட விவரங்களில் எந்த பிழையும் இருக்கக் கூடாது. தகவல்களில் ஏதாவது முரண்பாடு இருந்தால் தவணைத் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.