ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை ஏறியுள்ளது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹2.09 முதல் ₹2.35 வரை உயர்த்தியுள்ளன. அடுத்து சாதாரண பெட்ரோல் விலையும் ஏறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீங்கள் உங்கள் வண்டியில் XP95, ஸ்பீடு அல்லது பவர் போன்ற பிரீமியம் பெட்ரோல் போட்டால், இனி உங்கள் பாக்கெட்டில் இருந்து அதிக பணம் செலவாகும். டெல்லியில் பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹112.30-ஐ நெருங்கியுள்ளது. மும்பையிலோ, ₹120.30-ஐ தொட்டு சாதனை படைத்துள்ளது. சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் விலை ₹112 முதல் ₹118 வரை உள்ளது.
25
கூட்டி கழித்து பாருங்க
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம். ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலரை நெருங்கியுள்ளது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யின் விலை (இந்தியன் பாஸ்கெட்) கிட்டத்தட்ட இரு மடங்காகி 146 டாலரைத் தொட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வந்தன. அதை ஈடுகட்டவே முதலில் பிரீமியம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.
35
நல்ல செய்தி என்னவென்றால்
நல்ல செய்தி என்னவென்றால், தற்போதைக்கு சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசியாக மார்ச் 2024-ல் பொதுமக்களுக்கு ₹2 குறைக்கப்பட்டது, அந்த விலையே இன்றும் தொடர்கிறது. மொத்த விற்பனையில் பிரீமியம் பெட்ரோலின் பங்கு மிகக் குறைவு. எனவே, சொகுசு கார்கள் அல்லது ஹை-பர்பாமென்ஸ் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நேரடி பாதிப்பு.
பிரீமியம் பெட்ரோல் விலைகள் 'கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவை' (de-regulated) என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால், நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் விலையை மாற்றியமைக்கலாம். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80-100 டாலருக்கு மேல் நீடித்தால், வரும் நாட்களில் சாதாரண பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது நிறுவனங்களுக்கு கட்டாயமாகிவிடும். இது ஒரு எச்சரிக்கை மணி என்றே கூறலாம்.
55
எப்போ குறையும் தெரியுமா?
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹94.72 ஆக உள்ளது. அதே சமயம், மும்பையில் ₹103.44, கொல்கத்தாவில் ₹103.94, மற்றும் சென்னையில் ₹100.75-க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது.
பெட்ரோல் விலை எப்போது குறையும் என்பது ஒவ்வொரு சாமானிய மனிதனின் அன்றாடக் கேள்வியாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்ப் பொதிகளின் விலை மாற்றம் மற்றும் உலக நாடுகளுக்கு இடையிலான அரசியல் சூழல்கள் பெட்ரோல் விலையைத் தீர்மானிக்கின்றன."நிச்சயமாக குறையும்" என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஒரு மாயஜாலம்போலவே பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் எப்போது நடக்கும்? பொதுவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் போதோ அல்லது அரசாங்கம் வரிகளைக் குறைக்கும் போதோ இந்த 'மாயஜாலம்' நிகழ்கிறது. ஓபெக் நாடுகள் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை விற்க முடியாமல் தவிக்கும் நிலையில், ரஷ்யா எண்ணெய் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கா போரை நிறுத்தினால் கச்சா எண்ணெய் விலை முற்றிலும் குறைந்து அதனால் பெட்ரோல் விலையும் குறையும் என பொருளாதார வல்லுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.