ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய நிதியாண்டில், பான் கார்டு தொடர்பான பல முக்கிய விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் நிதி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்குவதுடன், பான் கார்டைச் சுற்றிய பல முக்கிய விதிமுறைகளும் மாற்றப்படுகின்றன. வங்கி பரிவர்த்தனைகள், சொத்து வாங்குதல், வாகனம் வாங்குதல் போன்ற பல நிதி செயல்பாடுகளில் பான் அவசியமான ஆவணங்கள் இருப்பதால், இந்த புதிய மாற்றங்கள் நேரடியாக பொதுமக்களின் தினசரி பணப்பரிவர்த்தனைகளை பாதிக்கலாம். குறிப்பாக வருமான வரிகள் கடுமையாக்கப்படுவதால், பான் பயன்பாட்டிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன.
25
பான் கார்டு விதிகள்
முதலில், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் ஆதார் மட்டும் கொடுத்தால் போதாது. அதனுடன் பிற அடையாள ஆவணங்களும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். பிறப்புச் சான்றிதழ், டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்கள் கூட சேர்க்கப்படலாம். இதன் மூலம் போலி அல்லது தவறான விண்ணப்பங்களை கட்டுப்படுத்த அரசு முயற்சி செய்கிறது.
35
பான் கட்டாயம்
வங்கி பரிவர்த்தனைகளில் பான் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. முன்பு ரூ.50,000க்கு மேல் பணம் வைப்பு செய்தால் பான் கட்டாயமாக இருந்தது. இதை தவிர்க்க சிலர் குறைவான தொகைகளை பல முறை வைப்பு செய்வது வழக்கம். இதை தடுக்க, இனிமேல் ஆண்டு அளவில் ரூ.10 லட்சம் வரை பணம் வைப்பு செய்தால் பான் கட்டாயம் என புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
வாகனங்கள் மற்றும் சொத்து வாங்குதல் தொடர்பான விதிகளிலும் மாற்றம் உள்ளது. இனிமேல் ரூ.5 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களை வாங்கும்போது பான் வழங்க வேண்டும். மேலும், சொத்து பதிவு மதிப்பு அல்லது சர்க்கிள் ரேட் ரூ.20 லட்சத்தை மீறினால் பான் அவசியம். முன்பு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக இருந்தது.
55
இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துதல்
மேலும், ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் பணம் செலுத்தினால் பான் வழங்க வேண்டும். இதற்கு முன் ரூ.50,000 மட்டுமே வரம்பாக இருந்தது. இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதிலும் இதேபோன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ரூ.2 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகளில் பான் கட்டாயம் என்ற விதி மாற்றமின்றி தொடர்கிறது. மொத்தத்தில், இந்த புதிய விதிகள் நிதி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.