PAN Card Rules: இந்த 5 பெரிய பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம்.. இல்லைனா பெரிய அபராதம்

Published : Jun 16, 2026, 10:30 AM IST

PAN Card Rules: வருமான வரி கண்காணிப்பில் பான் கார்டின் பங்கு அதிகரித்துள்ள நிலையில், சில முக்கிய நிதி பரிவர்த்தனைகளுக்கு அதை வழங்குவது கட்டாயமாகியுள்ளது.

PREV
15
பான் கார்டு புதிய விதிகள்

பலர் பான் கார்டை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மட்டுமே கருதுகின்றனர். ஆனால், இன்றைய நிதி சூழலில் அது ஒரு முக்கிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. வங்கி கணக்கு தொடங்குதல், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, டீமேட் கணக்கு திறத்தல் மற்றும் சொத்து பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் பான் கட்டாயமாகியுள்ளது.

25
எந்த பரிவர்த்தனைகளுக்கு பான் அவசியம்?

வருமான வரி விதிகளின்படி, ரூ.20 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள சொத்து வாங்குதல் அல்லது விற்பனை செய்தல், ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் வாங்குதல் போன்றவற்றுக்கான பான் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டியலிடப்படாத பங்குகள் பரிவர்த்தனை மற்றும் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான வாகன கொள்முதல் ஆகியவற்றிற்கும் பான் அவசியமாகிறது.

35
பான் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

பான் விவரங்கள் இல்லாமல் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. அதேநேரம், பான் மூலம் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் அனைத்தும் AIS, படிவம் 26AS மற்றும் SFT போன்ற வரித்துறை அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன. இதில், உங்கள் வருமான வரி கணக்கில் குறிப்பிட்ட வருமானத்திற்கும், மேற்கொண்ட செலவுகளுக்கும் இடையே பெரிய முரண்பாடு இருந்தால், வரித்துறை விளக்கம் கோரலாம்.

45
தவறான பான் எண் கொடுத்தால் கடும் விளைவு

போலியான அல்லது தவறான பான் எண்ணைப் பயன்படுத்துவது சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இதற்காக ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி, வரிச் சலுகைகள் பெறுவதிலும் சிக்கல். வரித்துறையின் கூடுதல் விசாரணைக்கும் ஆளாக நேரிட வாய்ப்பு உள்ளது.

55
வரித்துறையின் கண்காணிப்பு எப்படி?

நிதி பரிவர்த்தனைகளை வெளிப்படையாக வைத்திருக்கும் பான் முக்கிய கருவியாக செயல்படுகிறது. டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் அபாய மதிப்பீட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வரித்துறை தனிநபர்களின் செலவுகள், முதலீடுகள் மற்றும் அறிவிக்கப்பட்ட வருமானத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்கிறது. சந்தேகத்திற்கிடமான முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், நோட்டீஸ் அனுப்பப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories