ஓயோ விரைவு உணவக சேவை! 1500 ஹோட்டல்களில் ஆர்டர் செய்யலாம்!

Published : May 03, 2025, 06:39 PM IST

ஹோட்டல் செயின் நிறுவனமான ஓயோ உலகளவில் பல நாடுகளுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கும் ஹோட்டல் சேவைகளை வழங்கும் ஓயோ, தற்போது மற்றொரு துறையில் கால் பதித்துள்ளது.

PREV
15
ஓயோ விரைவு உணவக சேவை! 1500 ஹோட்டல்களில் ஆர்டர் செய்யலாம்!
ஓயோ அறை

விரைவு உணவக சேவை:

பிரபல விருந்தோம்பல் நிறுவனமான ஓயோ, உணவு மற்றும் பானத் துறையில் கால் பதித்துள்ளது. தங்கள் சொந்த ஹோட்டல்களில் உள்ளே சமையலறைகள் மற்றும் விரைவு சேவை உணவகங்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. "சமையலறை சேவைகள்" என்ற பெயரில் உள்ள வசதியைப் பயன்படுத்தி ஓயோ செயலி மற்றும் இணையதளம் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம். இந்த ஆர்டர்கள் ஹோட்டலுக்கு உள்ளேயே இருக்கும் சமையலறையில் இருந்து தயாரித்து வழங்கப்படும்.

25
ஓயோ அறைகள்

டவுன்ஹவுஸ் கஃபே:

"டவுன்ஹவுஸ் கஃபே" என்ற பெயரில் ஓயோ டவுன்ஹவுஸ் ஹோட்டல்களில் சிறப்பு விரைவு உணவக சேவை அமைக்கப்படும். முதற்கட்டமாக 2025–26 ஆம் ஆண்டில் 1,500 ஹோட்டல்களில் இந்த புதிய சேவைகள் கிடைக்கும். இந்த சேவைகள் மூலம் கூடுதலாக 5–10% வருவாய் கிடைக்கும் என்று ஓயோ மதிப்பிடுகிறது.

35
ஓயோ முன்னோடித் திட்டம்

முன்னோடித் திட்டம் வெற்றி:

இந்த யோசனை முதலில் டெல்லி, குருகிராம், ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் 100 ஹோட்டல்களில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது. இது வெற்றி பெற்றதால், நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ நிறுவனர் ரிதேஷ் அகர்வால் கூற்றுப்படி, 2026 நிதியாண்டில் இதன் மூலம் நிறுவனத்திற்கு ரூ.1,100 கோடி PAT லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. EBITDA லாபம் ரூ.2,000 கோடி வரை இருக்கலாம்.

45
ஓயோவின் வருவாய்

ரூ.2,100 கோடி வருவாய்:

2025 நிதியாண்டில் ஓயோவின் வருவாய் ரூ.2,100 கோடி, இது கடந்த ஆண்டை விட 60% அதிகம். G6 ஹாஸ்பிடாலிட்டி உடனான ஒப்பந்தத்தால் 2025 நிதி ஆண்டில் ரூ.275 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. G6 இல்லாமலேயே ஓயோவின் வருவாய் ரூ.1,886 கோடி. இது 42% வளர்ச்சி ஆகும்.

55
ஓயோ உணவு

ஓயோ தற்போது டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனே, இந்தூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் நிபுணர்களை நியமித்து வருகிறது. இதன் மூலம் தங்கள் புதிய உணவு மற்றும் பான சேவையை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஓயோவின் இந்த முடிவால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories