Ration Card: இனி ஊர் மாறினாலும் கவலையில்லை! எங்கு வேணாலும் ரேஷனில் பொருள் வாங்கலாம்! குட் நியூஸ்!

Published : Oct 10, 2026, 01:05 PM IST

Ration Card: ஊர் மாறினாலும் இனி புது ரேஷன் கார்டு வாங்க வேண்டியதில்லை. பழைய கார்டை வைத்தே நீங்கள் வசிக்கும் புதிய ஊரில் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு

வேலை, வியாபாரம் என பல காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு வேறு மாநிலம் செல்பவர்களுக்கு இது சூப்பர் நியூஸ். இனி புதிய ஊரில் ரேஷன் வாங்க, புது கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மாதக்கணக்கில் ஆவணங்களை கொடுத்து ஆபீஸ் ஆபீஸாக அலையும் கவலை இனி இல்லை. மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' (One Nation One Ration Card) திட்டம் மூலமாகவே இந்த வசதி கிடைக்கிறது. ஒரே ரேஷன் கார்டை வைத்து நாட்டின் எந்த மூலையிலும் ரேஷன் வாங்குவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். வேலைக்காக அடிக்கடி ஊர் மாறுபவர்களுக்கு இது ரொம்பவே உதவியாக இருக்கும்.

24
பழைய ரேஷன் கார்டே போதுமானது

நீங்கள் வசிக்கும் முகவரி மாறினாலும், உங்களிடம் இருக்கும் பழைய ரேஷன் கார்டே போதுமானது. அந்த கார்டை காட்டி, உங்கள் புதிய வீட்டின் அருகில் உள்ள ரேஷன் கடைகளிலேயே பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். கார்டு மாறுவதற்காக காத்திருந்து ரேஷன் பொருட்கள் தடைபடும் என்ற பயம் இனி தேவையில்லை. பயனாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும், தங்களது ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம் என உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெளிவாக அறிவித்துள்ளது. தகுதியான பயனாளிகள் புதிய இடத்திற்கு மாறினாலும் இந்த சலுகையை தொடர்ந்து பெறலாம்.

34
இந்த ரசீதுதான் முக்கியம்

பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு வேறு மாநிலங்களில் வசிப்பவர்களை மனதில் வைத்து தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பத்தின் உணவுத் தேவை உறுதி செய்யப்படுகிறது. புதிய ஊரில் ரேஷனுக்காக அலைய வேண்டியதில்லை என்பதால், மாத பட்ஜெட்டிலும் சுமை குறையும். ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிய பிறகு, டீலர்கள் உங்களுக்கு ஒரு ரசீது கொடுப்பார்கள். அந்த ரசீதை மறக்காமல் பத்திரமாக வாங்கிக்கொள்ளுங்கள். ரேஷன் வாங்கியதற்கான முக்கிய ஆதாரம் அதுதான். ரசீது வாங்கவில்லை என்றால், பின்னால் ஏதாவது பிரச்சனை வரும்போது நிரூபிப்பது கஷ்டமாகிவிடும்.

ரேஷன் பொருள் அளவு சரியாக இருக்கிறதா?

ரேஷன் பொருட்களை வாங்கியதும், ரசீதில் உள்ள அளவும் நீங்கள் வாங்கிய அளவும் சரியாக இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். இரண்டிலும் வித்தியாசம் இருந்தால், அமைதியாக இருக்காமல் உடனே புகார் அளியுங்கள். இதன் மூலம் உங்களுக்கான ரேஷன் பொருட்கள் திருடு போவதை தடுக்கலாம். ரேஷன் வழங்குவதில் ஏதாவது முறைகேடு நடந்தால், சம்பந்தப்பட்ட துறையின் இணையதளத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். இதுதவிர 'அன்ன சஹாயதா' (Anna Sahayata) மொபைல் ஆப் மூலமாகவும் புகார் கொடுக்க முடியும். அதாவது, வீட்டில் இருந்தபடியே உங்கள் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் கொண்டு செல்லலாம்.

44
புகார் எண்களை குறித்துக் கொள்ளுங்கள்

ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க 14457 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதேபோல 9868200445 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும் மெசேஜ் அனுப்பலாம். இந்த இரண்டு எண்களையும் மொபைலில் சேவ் செய்து வைத்துக்கொண்டால் அவசரத்திற்கு உதவும். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இது கட்டாயம் தேவை. அதனால் கார்டை எப்போதும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது ஊர் மாறினாலும் புது கார்டு இல்லாமல் ரேஷன் வாங்கும் வசதி, லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories