Published : Jan 18, 2025, 08:44 PM ISTUpdated : Jan 18, 2025, 08:53 PM IST
New direct tax bill: பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு புதிய நேரடி வரிச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளார். இது வருமான வரி தொடர்பான விதிகளை எளிமைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றும் தேவையற்றவற்றை நீக்கி, சாதாரண மக்களுக்கு ஏற்றதாக மாற்ற வழிவகை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
63 ஆண்டு பழமையான வருமான வரிச் சட்டத்தை மாற்றுவதற்கான புதிய சட்டம், இரண்டு, மூன்று பகுதிகளாக இருக்கும் என்றும் நிதித்துறை வட்டாரத் தகவல்களை தெரிவிக்கின்றன. அதிகாரிகள் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவுச் சட்டம் பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
27
Income Tax
வரி தொடர்பான சட்டங்கள் சிக்கலானவையாக இருப்பதாக பல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வரி செலுத்துவோர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளைப் பெற்று வரைவு மசோதா மாற்றியமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
37
Nirmala Sitharaman
பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் வரைவு மசோதாவைத் தயாரிக்க, நிதி அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆறு முதல் எட்டு வாரங்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.
47
Budget session 2025
கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த நடவடிக்கையை குறித்து அறிவித்த நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1ஆம் தேதி தனது உரையில் இந்த சட்டத்தைப் பற்றியும் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த மசோதா கூட்டத்தொடரின் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
57
Income Tax Slabs
நேரடி வரிச் சட்ட மசோதா 2010இல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வருமான வரிச் சட்டத்தைத் திருத்தி எழுதுவதற்கான மூன்றாவது முயற்சியாகும். பாஜக அரசு நிபுணர்கள் குழுவை அமைத்தாலும், அதன் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. வரிச் சட்டத்தில் உள்ள சிக்கலான விதிமுறைகள், புதிய சட்டத்தில் நீக்கப்படுவதை உறுதி செய்யவும் குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது.
67
Taxpayers
வருமான வரிச் சட்டத்தில் உள்ள பல பிரிவுகள், பல ஆண்டுகளாக நீக்கப்படாமல் உள்ளன. அவை தேவையற்றவை என்பதால் விலக்கப்படுகின்றன. மேலும், மொழியை சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம் என்பதால், அதையும் முடிந்தவரை எளிமையாக்கவும் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
77
Direct Tax Code bill
ஆனால், புதிய சட்டத்தில், இப்போதைக்கு புதிய சிக்கல்கள் இருக்காது என்றும் சொல்லபடுகிறது. இருப்பினும், மொழியில் பெரிய அளவுக்கு மாற்றம் செய்தால் வரி செலுத்துவோர் பல வழக்குகளில் புதிய விளக்கத்தைக் கோரி வழக்குத் தொடர வாய்ப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.