அரசு ஊழியர்கள் ரூ.25 லட்சம் பணிக்கொடை பெறுவது எப்படி?

First Published | Jan 18, 2025, 5:39 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்கள் இதற்கு தகுதியுடையவர்கள். விண்ணப்பத்தை படிவம் I மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Gratuity amount

கிராஜுவிட்டி அல்லது பணிக்கொடை என்பது ஒரு ஊழியரின் நீண்டகால சேவையை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் தொகையாகும். இந்த தொகையானது பணியாளரின் இறுதி சம்பளம் மற்றும் சேவைக் காலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இதன்படி ரூ.25 லட்சம் வரை கிராஜுவிட்டி தொகையை பணியாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Gratuity Rs 25 lakh

ஜனவரி 1, 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய தொகையான ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 50% ஆக உயர்த்தப்பட்டதன் விளைவாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Gratuity limit

மே 30, 2024 அன்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் புதிய பணிக்கொடை வரம்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும்போது ரூ.25 லட்சம் வரை மொத்தத் தொகையைப் பெறலாம்.

Gratuity Act

பணிக்கொடை பெறுவதற்குத் தகுதி பெற, ஒரு நிறுவனத்தில் ஊதியம் பெறும் முழுநேர ஊழியராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். பணியாளருக்கு மரணம் ஏற்பட்டால்கூட, அவரால் நியமிக்கப்பட்ட நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுதாரர் பணிக்கொடை தொகையைப் பெறலாம்.

Gratuity eligibility

பணிக்கொடையைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்த பணியாளர், முறைப்படி அதற்கான விண்ணப்பத்தை படிவம் I மூலம் தான் பணிபுரியும் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பணியாளரால் அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில், அவரால் நியமனம் செய்யப்பட்ட நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு அவர்கள் சார்பாக விண்ணப்பிக்கலாம்.

Gratuity calculation

விண்ணப்பத்தைப் பெற்ற நிறுவனம் அதனைச் சரிபார்த்து, பணியாளருக்குச் செலுத்தவேண்டிய பணிக்கொடைத் தொகையை உடனடியாகக் கணக்கிட வேண்டும். சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதிசெய்வதற்கும், தாமதங்களைத் தவிர்ப்பதற்கும் 1972ஆம் ஆண்டு பணிக்கொடைச் சட்டத்தில் விதிகள் உள்ளன.

Gratuity rules

பணிக்கொடைத் தொகையை செலுத்தவேண்டிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்துவது நிறுவனத்தின் கடமை. அவ்வாறு செய்யத் தவறினால், பணம் செலுத்தும் தேதி வரை நிலுவைத் தொகைக்கான வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டியிருக்கும்.

Latest Videos

click me!