Toll Plaza: அடையாள ஆவணங்களுடன் டோல் பிளாசாவுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய சிரமமும் இருந்தது. இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), டோல் பிளாசா அருகே வசிக்கும் வாகன ஓட்டிகளுக்காக புதிய டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், டோல் பிளாசாவுக்கு நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே மொபைல் செயலி வழியாக லோக்கல் பாஸ்-ஐ பெற முடியும். இந்த முயற்சி, டோல் பாஸ் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்துவதுடன், தேவையற்ற நேர விரயத்தையும் குறைக்கும் வகையில் உள்ளது.
25
டோல் பிளாசாவிலிருந்து 20 கிலோமீட்டர்
புதிய வசதியின் கீழ், டோல் பிளாசாவிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் வாகன உரிமையாளர்கள், 'ராஜ்மார்க் யாத்ரா' செயலி மூலம் டிஜிட்டல் லோக்கல் பாஸ்-க்கு விண்ணப்பிக்கலாம். இந்த பாஸ் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாக இருக்கும். அந்த காலத்தில், சம்பந்தப்பட்ட டோல் பிளாசாவை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு, உள்ளூர் பாஸ் பெற அடையாளம் மற்றும் முகவரி சான்றுகளை எடுத்துக்கொண்டு டோல் பிளாசாவுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. புதிய முறையில் இந்த முழு செயல்முறையும் சில நிமிடங்களில் ஆன்லைனிலேயே முடிவடைகிறது.
35
ராஜ்மார்க் யாத்ரா
இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதி தற்போது 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் உள்ள நகர்ப்புற விரிவாக்க சாலை-2 (UER-2) பகுதியில் முண்ட்கா-பக்கர்வாலா டோல் பிளாசாவில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள பிற டோல் பிளாசாக்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று NHAI தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர் உண்மையில் டோல் பிளாசாவிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கிறாரா என்பது ஜிஐஎஸ் (புவியியல் தகவல் அமைப்பு) தொழில்நுட்பத்தின் மூலம் சரிபார்க்கப்படுகிறது. இதனால் துல்லியமாகவும் உறுதி செய்ய முடியும். இந்த முறை, வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
55
டோல் பாஸ் விண்ணப்பம்
அதே நேரத்தில், இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதி அனைவருக்கும் பொருந்தாது. டோல் பிளாசாவிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும். இந்த புதிய முயற்சி முழுமையாக நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட பிறகு, உள்ளூர் பயணிகளுக்கு டோல் பாஸ் பெறும் நடைமுறை மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.