பெண்களுக்கு நிதி உதவி வழங்க 'அப்னா பரிவார் சுகி பரிவார் யோஜனா' என்ற புதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1500 கிடைக்கும். அத்துடன், மாதம் 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும்.
வங்காளத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. முதலில் அன்னபூர்ணா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் அக்கவுண்டில் 3000 ரூபாய் வந்து சேருகிறது.
25
மாநில அமைச்சரவை ஒப்புதல்
தற்போது பெண்களுக்காக மேலும் ஒரு புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. முதலமைச்சர் தலைமையிலான மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
35
ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் நிதி உதவி
இமாச்சலப் பிரதேச அரசு இந்த வசதியை கொண்டு வந்துள்ளது. அங்கு 'அப்னா பரிவார் சுகி பரிவார் யோஜனா' தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 3.5 லட்சம் தகுதியான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். அத்துடன் நுகர்வோர் குடும்பங்களுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க பெண்ணின் வயது 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். வயதானவர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் கிடைக்கும். அத்துடன் இமாச்சலப் பிரதேசத்தின் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பெண்களின் குடும்பத்தில் யாராவது அரசு வேலையில் இருந்தால் இந்த வசதி கிடைக்காது.
55
இந்த திட்டத்திற்கெல்லாம் தமிழகமே முன்னோடி
பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் இமாச்சலப் பிரதேசம் புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. இப்போது மாநிலப் பெண்கள் மாதம் 1500 ரூபாய் நிதி உதவியுடன் இலவச மின்சாரமும் பெறுவார்கள். இந்த திட்டத்திற்கெல்லாம் தமிழகமே முன்னோடி அப்படித்தானே.!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.