Gold Rate Today : அடி தூள்.!! சரசரவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

First Published May 23, 2023, 10:34 AM IST

கடந்த சில நாட்களாக அதிகரித்த வந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை பார்க்கலாம்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அமெரிக்க வங்கிகள் திவாலானதும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்ததால் விலை உயர்வை சந்தித்ததாக கூறப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் பார்வையை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்று 5,675க்கும், சவரனுக்கு 45,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 78.60க்கும், வெள்ளி கிலோ 78,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய (மே 23) நிலவரப்படி, சவரனுக்கு 240 குறைந்து, 45,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5,645க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து, 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78,000க்கும் விற்பனை ஆகிறது.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

click me!