கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. நகை வாங்குவோரிடையே தங்கத்தின் தொடர் விலையேற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
25
நேற்றைய நிலவரப்படி, தங்கம் சவரனுக்கு 80 குறைந்து, 44,400க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், தங்கம் கிராமுக்கு 10 குறைந்து, 5,550க்கு விற்பனை செய்யப்பட்டது.
35
அதேபோல வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 76க்கு விற்பனையானது. 1 கிலோ வெள்ளி 76,000க்கும் விற்பனையானது. இன்றைய (மார்ச் 27) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ 44,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,540 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,071 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,488 ஆக விற்பனையாகிறது.
55
வெள்ளி விலையை பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.76.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 76,000க்கு விற்பனையாகிறது.