ஆனால் ரூ. 10 நாணயங்களை எடுக்க மறுப்பது குற்றமாக கருதப்படும் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது தெரிந்ததே. இந்நிலையில், சமீபத்திய ரூ.10 நாணயங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தியன் வங்கி மேற்கொண்டுள்ளது. இதன்படி இந்தியன் வங்கி தெரித்ததாவது, இந்த நாணயங்கள் சட்டப்பூர்வமானது என்றும், தினசரி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியும்.