ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ரூ.32,000 வருமானம் உறுதி! பெண்களுக்கான சூப்பர் திட்டம்!

Published : Jan 18, 2025, 10:59 PM ISTUpdated : Jan 18, 2025, 11:12 PM IST

Mahila Samman Savings Certificate Scheme: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், ரூ. 2 லட்சத்தை டெபாசிட் செய்தால் 7.5 சதவீத வட்டி கிடைக்கும். முதிர்ச்சி அடைந்தவுடன், மொத்தம் ரூ.2,32,044.00 கிடைக்கும். இந்தத் திட்டம் வட்டி மூலம் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

PREV
16
ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ரூ.32,000 வருமானம் உறுதி! பெண்களுக்கான சூப்பர் திட்டம்!
Mahila Samman Savings Certificate

நாட்டின் பல்வேறு பிரிவினருக்காக மத்திய அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்காக சில சிறப்பு திட்டங்கள் கிடைக்கின்றன. அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டியை சம்பாதிக்க முடியும். அரசுத் திட்டமாக இருப்பதால், முதலீடு செய்யும் பணத்துக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

26
Mahila Samman Yojana

மத்திய அரசு 2023ஆம் ஆண்டில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் மட்டுமே கணக்கு தொடங்க முடியும். நீங்கள் திருமணமானவராக இருந்தால் உங்கள் மனைவி பெயரில் கணக்கு தொடங்கி இந்த திட்டத்தின் பலனைப் பெறலாம்.

36
Mahila Samman Savings Account

மகிளா சம்மான் திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டம் 2 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும்.

46
MSSC Interest Rate

மஹிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திடத்தில் கணக்கு தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்குப் பிறகு 40 சதவீதம் பணத்தைத் திரும்பப் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து பெண்களும் கணக்கு தொடங்கலாம். வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்கை ஆரம்பிக்கலாம்.

56
MSSC Benefits

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், அதிகபட்ச தொகையான ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால், 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும். திட்டம் முதிர்ச்சி அடையும்போது மொத்தம் ரூ.2,32,044 பெறலாம். ரூ.2 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி மட்டும் ரூ.32,044 ஈட்ட முடியும்.

66
Mahila Samman Account

மகிளா சம்மான் கணக்கை மனைவி, மகள் இருவர் பெயரிலும் தொடங்க முடியும். உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றால், உங்கள் தாயின் பெயரிலும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் கணக்கு தொடங்கி ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

click me!

Recommended Stories