LPG KYC: சமையல் எரிவாயுவிற்கான ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 23, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் கூட்டம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி இ-கேஒய்சி செய்ய காலக்கெடு நீட்டிப்பு! ஆகஸ்ட் 23, 2026 வரை வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு.
எரிவாயு அலுவலகங்களில் ஏற்பட்ட கூட்டம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, சமையல் எரிவாயு இ-கேஒய்சி செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 23, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
25
மானியம் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க இ-கேஒய்சி அவசியம்! இல்லையெனில் வணிக விலையில் சிலிண்டர் வாங்க நேரிடலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஆதார் சரிபார்ப்பு செய்யாவிட்டால், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான மானியம் நிறுத்தப்படலாம். இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
35
யாருக்கு இ-கேஒய்சி கட்டாயம்? உஜ்வாலா யோஜனா பயனாளிகளைத் தவிர மற்ற அனைவருக்கும் இது பொருந்தும்.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா வாடிக்கையாளர்களைத் தவிர, இதுவரை பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யாத அனைத்து சாதாரண எல்பிஜி வாடிக்கையாளர்களும் இதைச் செய்ய வேண்டும்.
வீட்டிலிருந்தபடியே இ-கேஒய்சி செய்வது எப்படி? அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் மூலம் எளிதாக முடிக்கலாம்.
IndianOil ONE, HP Pay போன்ற செயலிகளைப் பதிவிறக்கி, 'AadhaarFaceRD' செயலி மூலம் முகத்தை ஸ்கேன் செய்து, ஆன்லைனில் எளிதாக இ-கேஒய்சி செயல்முறையை முடிக்கலாம்.
55
ஆஃப்லைன் மூலம் இ-கேஒய்சி செய்வது எப்படி? அருகிலுள்ள எரிவாயு ஏஜென்சிக்குச் சென்று கைரேகை மூலம் சரிபார்க்கலாம்.
ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள், தங்கள் ஆதார் அட்டை மற்றும் கேஸ் புக்குடன் அருகிலுள்ள எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்று பயோமெட்ரிக் மூலம் இலவசமாகச் சரிபார்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.