Gas Cylinder: கேஸ் சிலிண்டரில் A, B, C, D குறியீடு இருக்கா? உயிரைக் காக்கும் 10 செகண்ட் ரகசியம்!

Published : Aug 24, 2026, 11:33 AM IST

Gas Cylinders: உங்க வீட்டு கேஸ் சிலிண்டரில் A, B, C, D என குறியீடுகள் போடப்பட்டுள்ளதா? இந்த குறியீடுகளுக்கான அர்த்தம் என்ன? இதற்கும் சிலிண்டர் பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு? என பார்க்கலாம்.

PREV
14
கேஸ் சிலிண்டரில் இருக்கும் A, B, C, D ரகசியம்

நம் ஒவ்வொருவர் வீட்டு சமையலறையிலும் இருக்கும் கேஸ் சிலிண்டரின் மேல் பகுதியில், A, B, C, D போன்ற எழுத்துக்களுடன் இரண்டு இலக்க எண் பொறிக்கப்பட்டிருப்பதை பலரும் கவனித்திருப்போம். இதை சிலிண்டரின் ‘காலாவதி தேதி’ என்று பலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், அது சிலிண்டரின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான ஒரு தகவலைக் குறிக்கிறது.

உண்மையில், இந்தக் குறியீடு சிலிண்டரின் காலாவதி தேதியைக் குறிக்கவில்லை. மாறாக, அந்த சிலிண்டருக்கு அடுத்த கட்டாயப் பாதுகாப்புச் சோதனை (statutory testing) எப்போது செய்யப்பட வேண்டும் என்பதற்கான கெடு தேதியாகும். இந்தத் தேதியைத் தெரிந்துகொள்வது, நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

24
இந்த குறியீட்டின் ரகசியம் என்ன?

சிலிண்டரின் மேற்புறத்தில் உள்ள மூன்று உலோகப் பட்டைகளில் ஒன்றில் இந்தக் குறியீடு அச்சிடப்பட்டிருக்கும். உதாரணமாக, B-27, D-28 என்பது போல இது காணப்படும். இதில் உள்ள ஆங்கில எழுத்து, ஆண்டின் காலாண்டையும், எண் அந்த ஆண்டையும் குறிக்கிறது.

A – ஜனவரி முதல் மார்ச் வரை

B – ஏப்ரல் முதல் ஜூன் வரை

C – ஜூலை முதல் செப்டம்பர் வரை

D – அக்டோபர் முதல் டிசம்பர் வரை

உதாரணமாக, ஒரு சிலிண்டரில் 'C-26' என்று இருந்தால், அந்த சிலிண்டர் 2026-ம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் மாதங்களுக்குள் சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று அர்த்தம். பலரும் இதை கவனிக்கத் தவறுகின்றனர்

34
பாதுகாப்பு சோதனை ஏன் அவசியம்?

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தகவல்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மிகவும் வலுவான எஃகு மூலம் தயாரிக்கப்பட்டு, கடுமையான தரக்கட்டுப்பாடுகளுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு வருகின்றன. இருப்பினும், காலப்போக்கில் ஏற்படும் தேய்மானத்தைக் கண்டறிய, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றைச் சோதிப்பது கட்டாயமாகும்.

புதிய சிலிண்டருக்கு முதல் சோதனை 10 ஆண்டுகள் கழித்தும், அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறையும் இந்த சட்டப்பூர்வ சோதனை மற்றும் வண்ணப்பூச்சுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சோதனைக்கு அனுப்பப்படும் சிலிண்டர்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தகுதியற்றவை பயன்பாட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகின்றன. தகுதியான சிலிண்டர்கள், புதிய சோதனைத் தேதியுடன் மீண்டும் விநியோகத்துக்கு வருகின்றன.

44
சிலிண்டர் டெலிவரி: நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த முறை உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் வரும்போது, அதன் எடை மற்றும் சீல் ஆகியவற்றை மட்டும் சரிபார்க்காதீர்கள். சிலிண்டரின் மேற்பகுதியில் உள்ள சோதனைத் தேதியையும் கவனியுங்கள். அந்தத் தேதி ஏற்கனவே கடந்து போயிருந்தால், அந்த சிலிண்டரை வாங்க வேண்டாம்.

மேலும், சிலிண்டரின் உடல் பகுதியில் அதிகப்படியான துரு, வளைவுகள் அல்லது சேதங்கள் இருந்தாலும், அதை உடனடியாக விநியோகஸ்தரின் கவனத்திற்குக் கொண்டு சென்று மாற்றுமாறு கோருவது அவசியம். இந்த சிறிய கவனம், பெரிய விபத்துகளைத் தவிர்க்க உதவும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories