இந்தியாவின் டாப் 10 பணக்காரக் குடும்பங்கள்! கோடீஸ்வரர்கள் நடத்தும் தனி சாம்ராஜ்ஜியம்!

First Published | Jan 9, 2025, 11:35 PM IST

List Of Top 10 Richest Families In India: இந்தியா உலகின் சில பணக்கார குடும்பங்களைக் கொண்ட நாடு. அவர்கள் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யங்களை நிறுவியது மட்டுமல்லாமல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களித்துள்ளனர். தொழில்நுட்பம், ஆற்றல், மருந்துகள், நுகர்வோர் பொருட்கள் போன்ற பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களை நடத்துவது முதல் வளர்ந்து வரும் துறைகளில் புதுமைகளை உருவாக்குவது வரை உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாகவும் உள்ளனர். இந்த வகையில் இந்தியாவின் டாப் 10 பணக்காரக் குடும்பங்கள் மற்றும் அவர்களின் சொத்துகள் பற்றி இத்தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

Mukesh Ambani Family

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றவர். இவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 95.4 பில்லியன் டாலர். முகேஷ் அம்பானி உலக அளவில் 18வது பில்லியனராக உள்ளவர்.

Gautam Adani Family

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் குடும்பம் 62.3 பல்லியின் டாலர் சொத்துகளை வைத்திருக்கிறது. இவர் உலக அளவில் 25வது பெரிய பில்லியனராக இருக்கிறார்.

Tap to resize

Shiv Nadar Family

ஹெ.சி.எல். நிறுவனத்தை நடத்திவரும் சிவ் நாடார் குடும்பம் 42.1 பில்லியன் டாலர் சொத்துகளைக் கொண்டது. உலக பில்லியனர்கள் தரவரிசையில் 37வது இடத்தில் உள்ளார்.

Savitri Jindal & family

சாவித்ரி ஜண்டால் குடும்பம் ஓ.பி. ஜிண்டால் குழுமத்தை நடத்தி வருகிறது. இந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் 38.5 பில்லியன் டாலர் மதிப்புள்ளவை. உலகத் தரவரிசையிர் 41வது இடத்தில் உள்ளனர்.

Dilip Shanghvi Family

சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் என்ற இந்தியாவின் முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்துபவர் திலீப் ஷங்வி. இவரது குடும்பச் சொத்துகள் 29.8 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. உலக பில்லியனர்கள் பட்டியலில் இவர் 59வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Cyrus Poonawalla Family

சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா இந்தியாவின் மற்றொரு புகழ்பெற்ற மருந்து நிறுவனம். இதன் தலைவர் சைரஸ் பூனாவாலாவின் குடும்பம் 22.2 பில்லியன் டாலர் சொத்துகள் கொண்டது. உலகளவில் 89வது இடத்தில் இருக்கிறார்.

Kumar Birla Family

குமார் பிர்லாவின் குடும்பம் 21.4 பில்லியன் டாலர் சொத்துகளைக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குடும்பம் தான் ஆதித்யா பிர்லா குழுமத்தை நடந்துகிறது. சர்வதேச அளவில் டாப் 100 பணக்காரக் குடும்பங்களில் ஒன்று இவருடையது.

Kushal Pal Singh Family

ஆரம்ப காலத்தில் ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக பிரபலமாக இருந்த நிறுவனம் டிஎல்எஃப் லிமிடெட். இந்த நிறுவனத்தின் அதிபர் குஷால் பால் சிங்கின் குடும்ப சொத்துக்கள் மொத்தம் 18.1 பில்லியன் டாலர் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ravi Jaipuria Family

பெப்சி, 7அப், மிரண்டா போன்ற பிரபல குளிர்பானங்களைத் தயாரித்து விற்கும் வருண் பிவரேஜஸ் நிறுவனத்தின் தலைவர் ரவி ஜெய்புரியா. இவரது குடும்ப சொத்துகள் சுமார் 17.9 பில்லியன் டாலர் வரும் என்று கூறப்படுகிறது.

Radhakishan Damani Family

தினசரி வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் ஈகாமர்ஸ் தளத்தை நடத்தும் டிமார்ட் நிறுவனத்தின் தலைவர் ராதாகிஷன் தமானி. இவரது கோடீஸ்வரக் குடும்பம் 15.8 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டது.

Latest Videos

click me!