சொந்தமா கடை நடத்துறீங்களா? டீக்கடை முதல் திருமண மண்டபம் வரை... லைசென்ஸ் கட்டாயம்.! எவ்வளவு செலவாகும் தெரியுமா.?!

Published : Jul 29, 2025, 06:53 AM IST

தமிழகத்தில் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் தொழில் செய்பவர்கள் அனைவரும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டீக்கடை முதல் திருமண மண்டபங்கள் வரை 119 வகையான தொழில்கள் இந்த உத்தரவின் கீழ் வருகின்றன. 

PREV
14
தொழில் செய்ய உரிமம் பெறுவது கட்டாயம்

தமிழக அரசு, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு டீக்கடை முதல் பல்வேறு தொழில்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24
புதிய சட்டம் அமல்

தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டம் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததையடுத்து, அரசாணை வெளியிடப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.

34
எந்தெந்த தொழில்களுக்கு பொருந்தும்?

இந்த உத்தரவு, டிக்கடை, பழைய பேப்பர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை, கொரியர் சேவைகள், அச்சகம், இறைச்சி மற்றும் மீன் கடைகள், தையல் தொழில், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களை உள்ளடக்கியது. இந்தத் தொழில்களுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.30,000 வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

44
நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பு

இந்தப் புதிய சட்டம், கிராமப்புறங்களில் உள்ள தொழில்களை ஒழுங்குபடுத்துவதற்கும், உரிமம் பெறுவதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கும் உதவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது கிராமப்புற வணிகங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories