வெறும் 80 ரூபாய்க்கு ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்! எல்ஐசி வழங்கும் சூப்பர் பாலிசி!

Published : Nov 21, 2024, 10:16 AM ISTUpdated : Nov 21, 2024, 10:37 AM IST

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு பல நன்மைகளைத் தரும் பாலிசிகளை வழங்குகிறது. அத்தகைய ஒரு ஸ்பெஷல் பாலிசி எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி. இதில் தினசரி 100  ரூபாய்க்கும் குறைவாக சேமிப்பதன் மூலம் ரூ 10 லட்சம் வரை நிதியை உருவாக்கலாம்.

PREV
14
வெறும் 80 ரூபாய்க்கு ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்! எல்ஐசி வழங்கும் சூப்பர் பாலிசி!
LIC Jeevan Anand Policy

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு பல நன்மை பயக்கும் பாலிசிகளை வழங்குகிறது. எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியில் தினசரி ரூ.100க்கும் குறைவாக சேமித்து ரூ.10 லட்சம் வரை நிதியை உருவாக்கலாம். பாதுகாப்பான முதலீட்டுக்கு இந்த பாலி ஒரு சிறந்த வழி.

24
LIC Policy

இந்த பாலிசியில் முதலீடு செய்யத் தொடங்க உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். தினமும் ரூ.80 சேமித்து இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் ஆகலாம்.

ஆண்டு பிரீமியம் ரூ 27,000. அதாவது, மாதாந்திர பிரீமியம் ரூ.2,300. தினசரி கணக்கீடு செய்தால், ஒரு நாளைக்கு 80 ரூபாய். 21 ஆண்டுகளில் மொத்த முதலீடு சுமார் ரூ.5.60 லட்சம். முதிர்வுக் காலத்தில் ரூ. 10 லட்சம் கிடைக்கும்.

34
Jeevan Anand Policy

இந்த பாலிசியில், முதலீட்டாளர் லாபத்துடன் போனஸ் பலனைப் பெறலாம். இதில் ரூ.5 லட்சம் காப்பீடு மற்றும் ரூ.8.60 லட்சம் ரிவிஷனல் போனஸ் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், இரட்டை போனஸ் பலன் கிடைக்கும்.

விபத்து மரணத்திற்கு காப்பீடு, இயலாமை மற்றும் தீவிர நோய்க்கான பாதுகாப்பு போன்றவை பாலிசியின் மற்ற நன்மைகள். மேலும், பாலிசிதாரர் இறந்தால், உறுதியளிக்கப்பட்ட தொகையில் 125% நாமினிக்கு வழங்கப்படும்.

44
Insurance Policy

எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி முதிர்ச்சியின் போது பெரிய நிதியை வழங்குவது மட்டுமல்லாமல், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிதிப் பாதுகாப்பையும் வழங்குகிறது. குறைந்த முதலீட்டில் பெரிய நிதியை உருவாக்க விரும்புவோருக்கு இந்த திட்டம் சிறந்தது.

click me!

Recommended Stories