Company Layoff: திடீர் பணி நீக்கத்தால் வேலை போச்சா.! ஜாப் லாஸ் இன்சூரன்ஸ் கை கொடுக்கும்.! தெரிஞ்சுகிட்டா EMI கட்டுவதற்கு பிரச்சினை இருக்காது.!

Published : Aug 01, 2025, 08:09 AM IST

திடீர் வேலை இழப்பைச் சமாளிக்க ஜாப் லாஸ் இன்சூரன்ஸ் ஒரு பாதுகாப்பு வలையாக செயல்படுகிறது. இது வாழ்க்கைச் செலவுகளுக்கு நிதி உதவி அளித்தாலும், விதிமுறைகளைப் புரிந்துகொண்டு, நிபுணர் ஆலோசனை பெறுவது அவசியம்.

PREV
17
பயமுறுத்தும் கம்பெனி Lay off

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2025-ல் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய பணிநீக்கத்தை அறிவித்து 12,200 ஊழியர்களை வேலைவிடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்ப துறையையே அதிர வைத்திருக்கும் நிலையில், 'ஜாப் லாஸ் இன்சூரன்ஸ்' (Job Loss Insurance) என்ற தொழில்நுட்ப குறித்த காப்பீட்டு திட்டம் மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

27
ஜாப் லாஸ் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ஜாப் லாஸ் இன்சூரன்ஸ் என்பது, உங்கள் வேலை திடீரென போனாலும், உங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கான நிதி ஆதரவை கொடுக்கும் ஒரு பாதுகாப்புக் காப்பீடு. இதன் மூலம் உங்கள் கடன் தவணைகள் (EMIs), வீட்டு வாடகை, மின்சாரம் போன்ற கட்டணங்கள், மருத்துவச் செலவுகள் போன்றவற்றை நீண்டகால சேமிப்புகளை எடுக்காமல் சமாளிக்க முடியும்.

37
எப்படி செயல்படுகிறது?

இந்தக் காப்பீட்டில் மாதம் ரூ.10,000 வரை அல்லது சம்பளத்தின் அதிகபட்சம் 70% வரை பெற முடியும். சில திட்டங்களில் முதல் மாதம் ரூ.5,000, இரண்டாவது மாதம் ரூ10,000, மூன்றாவது மாதம் ரூ.15,000 என படி படியாகவும் வழங்கப்படுகிறது. இருப்பினும், பணிநீக்கம் ஏற்பட்ட பிறகு குறைந்தது 30 நாட்கள் வேலை இல்லாத நிலை தொடர்ந்தாலே இந்தநிதி கிடைக்கும். காப்பீட்டு தொகை உங்கள் சம்பளம், துறை, பணியின் பாதுகாப்பு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

47
யார் இந்த காப்பீட்டுக்கு தகுதியுடையவர்கள்?
  • தனியார் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்.
  • நிறுவனத்தின் நிகழ்நிலைத் திட்டங்களில் நேரடியாக உள்ள ஊழியர்கள்.
  • டவுன் சைஸிங், ஏ.ஐ மாற்றம் போன்ற காரணங்களால் வேலை இழந்தவர்கள்.
57
யாருக்கு இந்த காப்பீடு கிடையாது?
  • சுயதொழில் செய்வவர்கள் அல்லது முடிவாகவே வேலை இல்லாதவர்கள்.
  • சுய விருப்பப்படி வேலையை விட்டு வெளியேறுபவர்கள்.
  • வேலைக்குச் சேரும் முன் (probation period) காலத்தில் வேலை இழந்தவர்கள்.
  • ஒப்பந்த அடிப்படையிலான, தற்காலிக அல்லது சீசனல் வேலைகள்.
  • மோசடி, பணியில் குறைபாடு, ஒழுக்கக் குறைவு ஆகிய காரணங்களால் நீக்கப்பட்டவர்கள்.
67
Claim மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள்

வாலண்டரி ரிசைக்னேஷன் (சுய விருப்பத் தூண்டுதல்) காரணமாக வேலை விலகினால்.

ரிட்டையர் ஆகும் அல்லது probation காலத்தில் நீக்கம் செய்யப்படின்.

பாண்டமிக், முன்கூட்டியே இருந்த நோய்கள் ஆகியவை காரணமாகவே வேலை இழந்தால்.

இதில் உள்ள சிக்கல்

பல நிறுவனங்கள் 3 மாதங்கள் வரை சேவரன்ஸ் பே (Severance Pay) அளிக்கின்றன. அதன்பின், "வாலண்டரி ரிசைக்னேஷன்" ஆவதாக ஆவணங்களில் குறிப்பிடுவார்கள். இதனால் அந்தத் தொழிலாளி காப்பீட்டு தொகையைப் பெற முடியாமல் போகலாம்.இதனால், பணி இழப்பு ஏற்பட்டாலும் காப்பீட்டுத் தொகையை பெற தனது நீக்கம் கட்டாயம் நிறுவனம் மூலம் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்.

77
வேலை இழப்புக்கு முன் செய்ய வேண்டியவை
  • அவசர நிதி (Emergency Fund): குறைந்தது 6 மாத செலவுக்கான நிதியை சேமிக்கவும்.
  • EMI காப்பீடு: லோன்களுக்கு 'ஜாப் லாஸ் கவர்' சேர்ந்தால், வேலை இழந்தாலும் கடன்தொகையை காப்பீட்டுதாரர் செலுத்துவார்.

ஆலோசனை அவசியம் மக்களே.!

ஜாப் லாஸ் இன்சூரன்ஸ் ஒரு பாதுகாப்புக் கருவி என்றாலும், அதன் விதிமுறைகள் குறித்த தெளிவும், உங்கள் வேலை குறித்த ஆவணங்களும் மிக முக்கியம். வழக்கமான பணிநீக்கம் என்றால் இது உதவியாக இருக்கும். ஆனால் ‘ரிசைக்னேஷன்’ என்ற ஆவணம் இருந்தால் தவிர்க்கப்படலாம். அதனால், இன்சூரன்ஸ் வாங்கும் முன் நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது. வேலை என்பது நிரந்தரம் அல்ல. ஆனால் நம்முடைய வாழ்க்கைத் தேவைகள் நின்றுவிடமுடியாது. அதற்காகவே இப்படியான பாதுகாப்பு திட்டங்களை சிந்தித்து செயல்பட வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories