வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. SMS அலெர்ட்களுக்கு கட்டணம்.. யாருக்கு எவ்வளவு.?

Published : Nov 13, 2025, 12:11 PM IST

குறிப்பிட்ட இந்த வங்கி தனது SMS அலெர்ட்களுக்கு புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மாதத்திற்கு 30 SMS-களுக்கு மேல் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்திக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

PREV
14
எஸ்எம்எஸ் அலெர்ட் ஃபீஸ்

புதிய விதிப்படி, வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 30 எஸ்எம்எஸ் (SMS) அலெர்ட்கள் வரை இலவசமாகப் பெறலாம். ஆனால், 30 SMS-ஐ தாண்டி வரும் ஒவ்வொரு செய்திக்கும் ரூ.0.15 கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, 30 இலவச செய்திகளைத் தாண்டி வரும் UPI, NEFT, RTGS, IMPS பரிவர்த்தனைகள், ATM பணவாங்குதல், ரொக்க பரிவர்த்தனை, காசோலை டெபாசிட், டெபிட்-கிரெடிட் கார்டு பயன்பாடு போன்றவற்றுக்கான அலெர்ட்கள் அனைத்திலும் இந்த கட்டணம் பொருந்தும்.

24
வங்கி அறிவிப்பு

ஆனால், அனைத்து வாடிக்கையாளர்களும் SMS கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கோடக் வங்கியின் அறிவிப்பின் படி, சேமிப்புக் கணக்கு அல்லது சம்பளக் கணக்கில் ரூ.10,000 அல்லது அதற்கு அதிக பட்ஜெட்டைக் கொண்டவர்கள் மாதத்திற்கு 30 SMS-ஐ தாண்டியும் இலவசமாக அலெர்ட்களைப் பெறலாம். இவர்கள் மீது எந்த கூடுதல் SMS கட்டணமும் இல்லை.

34
டெபிட் கார்டு கட்டணங்கள்

இதற்கிடையில், கோடக் மஹிந்திரா வங்கி தனது டெபிட் கார்டு கட்டணங்களையும் குறைத்துள்ளது. நவம்பர் 1 முதல் Privy League Black Metal Debit Card-ன் வருஷக் கட்டணம் ரூ.5,000-லிருந்து ரூ.1,500-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் Privy League LED Debit Card-ன் கட்டணம் ரூ.2,500-லிருந்து ரூ.1,500-ஆக மாற்றப்பட்டுள்ளது. புதிய SMS கட்டண விதி மற்றும் குறைக்கப்பட்ட கார்டு கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

44
கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் தகவலின்படி, SMS அலர்ட் சேவைக்கான செயல்பாட்டு செலவுகளை சமாளிக்க இந்த புதிய கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதேசமயம், வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் கணக்கு தகவல்களைத் தொடர்பான தனது சேவையை வங்கி தொடரும் என்றும் தெரிவிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories